The Element
Chapter 7 - The Baby
18ம் தேதி மீண்டும் பெருமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்தது. நான்கு மாவட்டங்களில் பெய்த மழையின் அளவு, கோவில்பட்டியில் 50cm மழை பெய்தது எல்லாம் தெரியவந்தது. தூத்துக்குடியில் அது வரை 36cm மழை.
இதற்கு மேல் மழை பெய்து தண்ணீர் உயர்ந்தால் கீழ் தளத்தில் house owner வீட்டிற்குள் தண்ணீர் சென்று விடும். அவர்களுக்கு மாடியிலும் அறைகள் உள்ளதால் அங்கே சென்று விடுவோம் என்றனர்.
அப்போது எங்கள் எதிர் வலது புற வீட்டில் இருக்கும் 3 மாத குழந்தையையும் அம்மாவையும், துணைக்கு மேலும் ஒரு நபராக 3 பேரை ஓரிரவு எங்கள் வீட்டில் தங்க வைக்கலாமா என்று House Ownerன் மனைவி வழியாக கேட்டனர். அவர்கள் வீட்டில் தண்ணீர் நுழைவதற்கு அரை அடிக்கும் குறைவான உயரம் தான் இருந்தது. பகல் வெளிச்சம் இருக்கும் போதே கொஞ்சம் உயரமான, பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட வேண்டும் என்கிற தவிப்பு.
என்னுடைய மனைவி இதென்ன கேள்வி கிளம்பி வர சொல்லுங்க என்று House Owner ன் மனைவியிடம் சொல்லி விட்டாள். House Owner வீட்டின் மாடியில் தொட்டில் கட்ட hook இல்லாததால் இங்கே வர சொல்லி விட்டேன் என்றாள்.
எனக்கு வேறெதையும் விட மேலே தொட்டியில் உள்ள தண்ணீர் சீக்கிரம் காலியாகி விடுமே என்கிற பயம். இரவு வெளிச்சம், காற்று இல்லாமல் குழந்தையின் அழுகுரலை கேட்டு கொண்டிருக்க போகிறோம் என்று நினைத்தேன்.
குழந்தை பெரும்பாலும் தூங்கிக்கொண்டே இருந்தான். அழவே இல்லை. இவ்வளவு சமத்து குழந்தையா என்று மனைவியிடம் கேட்ட போது முதல் 3 மாசம் அப்படி தான் இருப்பாங்க. புரண்டு படுக்க ஆரம்பிச்ச பிறகு நாம கண்ண மூடி தூங்க முடியாது என்றாள்.
இந்த சூழ்நிலையில் அறிமுகம் ஆகி Ice break செய்து கொள்ள நேரம் இல்லை என்பதால் பெரும்பாலும் மிக அமைதியாக, கொஞ்சம் இறுக்கமாக அவரவர் cell phoneல் இருந்த கடைசி சொட்டு batteryஐ காலி செய்யும் தீவிரத்தில் இருந்தோம்.
குழந்தைக்கு தொட்டில் கட்ட 5 plastic நாற்காலிகளை ஒன்றின் மீது ஒன்றாக போட்டு மேலே ஏறி hookல் கயிற்றை மாட்டிக்கொடுத்தேன். இருள் கவிந்து விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தலையை தொங்க போட்டு ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்திருந்தோம். அப்போதும் லேசான சாரல் விழுந்து கொண்டிருந்தது.
No comments:
Post a Comment