The Element
Chapter 6 - The Water Tank
18ம் தேதி காலையில் மின் இணைப்பு வரவில்லை என்றவுடன் முதலில் உரைத்த விஷயம் நேத்து போட்ட 10 நிமிட motor எவ்வளவு தண்ணீரை தொட்டியில் சேர்ந்திருக்கும் என்பது தான்.
கோவில்பட்டி என்றால் வீட்டில் குடம், அண்டா, drum என்று 500 லிட்டர் தண்ணீர் கொள்ளும் அளவுக்கு எல்லோர் வீட்டிலும் பாத்திரம் வைத்திருப்பார்கள். இந்த நவீன வாழ்க்கையில் குடத்திற்கே அவசியம் இல்லை. மேலே மழை கொட்டினாலும் ஒரு நாள் பயன்பாட்டிற்கு தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு கூட வீட்டில் பாத்திரங்கள் இல்லை.
தொடர்ந்து மழை விழுந்து கொண்டிருந்ததால் மாடியில் சென்று தொட்டியில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்று பார்க்க முடியவில்லை. துணி மழைல கிடக்கட்டும்னு விடாம 17 night வேற one time rinse போட்டோமே, அதுக்கு எவ்வளவு தண்ணி போச்சுன்னு தெரியலையே என்று பொறுமிக் கொண்டிருந்தேன்.
Kitchen sinkல் தண்ணீர் வந்த வேகத்தில் அரை தொட்டி இருக்கும் என்று கணித்தேன். 1000L தொட்டி அது. கொஞ்சம் நிதானம் வந்தது. சரி மின்சாரம் மீண்டு விடும் அது வரை கவலை இல்லை. அப்படி நினைக்கும் போது மழை நீரின் அளவு தரை தளத்தில் உள்ள sumpஐ நெருங்கி இருக்கவில்லை.
மழை தூவானமாக மாறிய போது குடையை எடுத்து கொண்டு மாடிக்கு சென்று தொட்டியை பார்த்தேன். 5ல் 4 பகுதி இருந்தது. கிட்ட தட்ட 800L அல்லது அதற்கு கொஞ்சம் மேலாக இருக்கலாம்.
மூன்று நாள் மின் இணைப்பு வராவிட்டாலும் சமாளிக்கலாம் என்று தைரியம் வந்தது. இதற்குள் வெள்ள நீர் கீழே sump ஐ மூழ்கடித்து விட்டது. இனி மின் இணைப்பு வந்தாலும் sumpஐ சுத்தம் செய்யாமல் அந்த தண்ணீரை பயன்படுத்துவது பைத்தியகாரத்தனம். அடுத்த 3 நாட்கள் மின் இணைப்பு வரவில்லை தான்.
No comments:
Post a Comment