Thursday, 28 December 2023

The Element Chapter 15 - The Dzire

The Element 


Chapter 15 - The Dzire 


UPS மற்றும் AC வரிசையில் வாங்கக்கூடாது என்று வைத்திருந்த ஒரு பொருள் Car. ஆனால் corona காலத்தில் அது எல்லாம் மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை வந்தது. இன்று car வைத்திருப்பவர்களில் பலர் corona காலத்தில் வாங்கியவர்கள் தான். 


பொது போக்குவரத்து முடங்கியது, நோய் பயம், cab driverகளின் rash driving, auto ஓட்டுநர்களின் அடாவடி எல்லாம் சேர்ந்து மக்களை சொந்த வண்டி நோக்கி தள்ளியது. வெள்ளம் வரும் நேரம் season 1, season 2 என்று வருடா வருடம் வருவதால் மக்கள் பழையபடி நம்ம government வண்டி இருக்க கஷ்டப்பட்டு வண்டி வாங்குவானேன் என்று மாற்றி யோசிக்கலாம். 


5 வருட சேமிப்பை கொடுத்து 2nd hand அல்ல 4th hand ஆக போன வருடம் 2011 model dzire வண்டி ஒன்றை வாங்கினேன். ரெம்ப நல்ல வண்டி. நல்ல mileage கொடுக்கும். வாங்கிய பிறகு நான் மாதம் எதுவும் சேமித்து விடாமல் பார்த்துக்கொண்டது. 


ஆனாலும் ஒரு குடும்பமாக பெற்றோர், மனைவி, மகன் சமயங்களில் உறவினர்கள், நண்பர்களுக்கு trip அடிக்கும் போது இந்த வண்டியால் இத்தனை சௌகரியமாக நாலு இடத்துக்கு போய் விட்டு வர முடிகிறதே அதற்கு எப்படி விலை வைக்க முடியும் என்று சமாதானம் செய்து கொண்டேன். 


அந்த வண்டி இந்த வெள்ளத்தில்  சிக்கி வீணாய் போகப் போகிறதே என்ற கவலை அழுத்தியது. தண்ணீரின் அளவு வண்டியின் டயரை தொட்டு உயரத் தொடங்கிய போது கொஞ்சம் தவித்து விட்டேன். 11 வருட பழைய வண்டியாக இருந்தாலும் என் வாழ்க்கையில் மிக அதிக விலை கொடுத்து வாங்கிய பொருள் அது தான்.  


நீரின் அளவு front wheel mud flap ஐ தொட்டு மேலே உயருவது போல தோன்றியது. நான் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அது வரை silencerக்குள் தண்ணீர் செல்லவில்லை என்பது ஒரு சிறிய ஆறுதல். 


Bikeன் silencerஐ cover செய்த house owner இதை மறந்து விட்டார். என் bikeக்கு அவர் நினைவு வைத்து cover போட்டதே பெரிது இதில் காருக்கும் செய்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்னுடைய அதிகபிரசங்கித்தனம். 


நான் வழிவிட்ட பூரான் காருக்கு கீழாக தான் தண்ணீரில் நீந்தி சென்றது. தெருவில் மக்கள் நடக்க சிறிய அலைகள் உருவாகி அவை வண்டியில் வந்து மோதின, வண்டிக்கு கீழாக சென்று கடைசி சுவரில் மோதி திரும்பி வந்து வண்டியின் பின்பக்கத்தை நனைத்தன. 


நான் ஒவ்வொன்றையும்  பதட்டத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். 18ம் தேதி இரவு பேசிய ஒரு நண்பரிடம் விஷயத்தை சொன்னேன். Insuranceக்கு inform பண்ணிடு, வண்டியை start பண்ணிடாத, அவனே mechanic அனுப்பி, check பண்ணி, சரி பண்ணி கொடுத்திருவான் என்றான். 


மறுநாள் என் அப்பாவிடம் பேசி ஊரில் வண்டி ready பண்ண சொன்ன போது உன் வண்டி என்னாச்சு என்று கேட்டார். நான் நிலைமையை சொன்னேன்.

Ground Clearance காக jeep type வண்டி வேணும் அப்போது தான் தேங்கிய நீரில் engineல் தண்ணீர் ஏறாமல் போக முடியும் என்று சொன்னேன்.  


அவரிடம் பேசிய பிறகு வண்டியை பார்க்க கீழே இறங்கி சென்றேன். ஒரு 10cm அளவாவது தண்ணீர் கிடந்திருக்கும். 2 நாளில் மழை நீர் சாக்கடையில் கலந்து, சகதி படிந்து, கலங்கி துர்நாற்றமெடுக்க ஆரம்பித்திருந்தது. அதில் கால் வைத்து இறங்கி காருக்குள் ஏறி பார்க்க தயக்கமாக இருந்தது. 


காரின் சாவியை எடுத்து வந்து remoteல் unlock பட்டனை அழுத்தினேன். வேலை செய்தது. அப்படியென்றால் battery நன்றாக இருக்கிறது என்று தானே அர்த்தம்? தேங்கி நின்ற நீரில் கால்வைக்காமல் காருக்குள் செல்வது எப்படி என்று பார்த்தேன். 


பின்கதவுக்கு நெருக்கமாக நிறுத்தப்பட்டிருந்த Dio வண்டியின் floor boardல் ஏறி, அதில் நின்றவாறு பின் கதவை திறந்து, தலையை நன்கு குனிந்து வண்டிக்குள் நுழைந்தேன். உடனே கதவை சாத்தினேன். Basic Model Nokia phoneல் உள்ள torch ஐ on செய்து காரின் floor boardல் ஈரம் இருக்கிறதா என்று பார்த்தேன். ஏதாவது பூரான், செவிட்டு பாம்பு வகையறா இருக்கிறதா என்றும். 


காரினுள் தண்ணீர் ஏறவில்லை அப்படியென்றால் வண்டி நன்றாக இருக்கிறது என்று தானே பொருள்? எனக்கு உறுதியாக தெரியவில்லை. பின் சீட்டில் இருந்து குனிந்து, வளைந்து driver seatல் சென்று அமர்ந்தேன். அந்த 3 நாட்களில் மிக பாதுகாப்பான ஒரு இடத்திற்கு வந்துவிட்ட ஓர் உணர்வை அடைந்தேன். வண்டியின் உள்ளே இருப்பது கதகதப்பாக இருந்தது. 


சாவியை iginitionல் பொருத்தி ஒரு முறை திருக்கினேன். Speedo metreல் வண்டி நலம் என்பதற்கான அத்தனை symbol களும் ஒளிர்ந்தன. ஆனாலும் எனக்கு சந்தேகம். வண்டியை start செய்வதா வேண்டாமா என்று. 


என்னுடைய மச்சானுக்கு phone செய்தேன். அவர் ஜன்னல் எல்லாம் திறந்து வச்சிட்டு பயப்படாம start பண்ணு, தூத்துக்குடில carல தான் பல per phone charge போடுறாங்க. TV  news ல காமிச்சாங்க என்றார். 


எனக்கு சந்தேகம் தீரவில்லை. அப்போது தான் ஒரு நண்பர் காரில் phone charge போடலாமா என்று கேட்டிருந்தார். அவரிடம் நிலைமையை சொல்லிவிட்டு தான் வண்டிக்குள் ஏறி வந்திருந்தேன். 


வண்டியை விட்டு வெளியே வந்து மாடிக்கு சென்று வண்டிகளை பற்றி நன்றாக தெரிந்த என் நண்பரின் தம்பிக்கு phone செய்தேன். பல முயற்சிகளுக்கு பிறகு connect ஆனது. 


அவர் மேலதிக கேள்விகள் கேட்டார். Head lamp check செய்தேனா என்று கேட்டார். வீட்டுக்கு வெளில ரெண்டு அடி தண்ணி கிடக்குன்னா கார் நிக்கிற இடத்துல அப்படியே இருக்கிறது தான் உங்களுக்கும் காருக்கும் நல்லது என்றார். பின்னர் start பண்ணி பார்ப்பதில் பிழையில்லை என்றார். 


நான் இனி இழப்பதற்கு என்ன என்று மீண்டும் ஜாக்கி சான் போல வண்டிக்குள் நுழைந்து driver seatல் அமர்ந்து சாவியை ignitionல் கொழுவி ஒரு முறை turn செய்து ஜன்னல்களை திறந்து விட்டேன். இதயம் படார் படாரென்று உள்ளே அடித்துக்கொண்டது. Clutchஐ மிதித்துக்கொண்டு வண்டியை start செய்வதற்காக சாவியை திருக்கினேன். 


No comments:

Post a Comment