Gangster பற்றிய படமென்றால் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் நிதர்சனத்தில் ஒரு gangster நிம்மதியாக வாழ முடியுமா?! எப்போதும் போலீஸ் பயம். எதிர் அணி குறித்த அச்சம். கூடே இருப்பவர்கள் காட்டி குடுத்து விடலாம். முதுகில் குத்தி விடலாம். உயிருக்கு உத்திரவாதம் இல்லை.
படங்களில் ஒரு Gangster கதா நாயகனாக வரும் போது சில template விசயங்கள் இருக்கும். அதை தாண்டி படத்தில் என்ன இருக்கிறது என்பது தான் நினைவில் வைக்க வேண்டிய Gangster படமா இல்லையா என்பதை முடிவு செய்யும்.
The Show Must Go On நடுத்தர வயதை அடைந்து விட்ட ஒரு Gangster பற்றிய படம். குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும், பிள்ளைகளை கனடா அனுப்பி படிக்க வைக்க வேண்டும், தண்ணிர் தீடீர் என்று நின்று போகாத அளவுக்கு ஒரு வசதியான வீடு வேண்டும் என்று நாயகனுக்கு தேவைகள் எறும்புகள் போல வரிசை கட்டி வருகின்றன.
கதா நாயகன் In-goo தனது Boss உத்தரவின் பேரில் ஒரு கட்டிட காண்ட்ராக்ட் உரிமையை ஏலம் எடுத்தவரிடம் இருந்து அடித்து வாங்குகிறான். இதில் வரும் பணத்தில் நிம்மதியாக settle ஆவது திட்டம். ஆனால் அதில் ஆயிரம் பிரச்சினைகள் முளைக்கின்றன.
Boss ன் தம்பி In-goo விடம் பங்கு கேட்கிறான். வேலையும் தொடர்ந்து நடக்காமல் தொய்வடைகிறது. இதற்கிடையில் எதிர் அணியை சேர்ந்த ஆனால் In-goo வின் நெருங்கிய நண்பன் contract குறித்து In-goo விடம் விசாரிக்கிறான். தன்னோடு வந்து விடுமாறும் அழைக்கிறான்.
In-goo மீது ஒரு கொலை முயற்சி நடக்க வாழ்க்கை தலை கீழாக மாறி விடுகிறது. தன் மீது தனது மனைவி, மகள் கொண்டுள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது என்பதை உணர்கிறான். வயதாகி வருவதையும் இளம் வயதில் மல்லுகட்டி சண்டை போட்டது போல இப்போது முடியவில்லை என்பதையும் உணர்கிறான்.
In-goo தோன்றும் காட்சிகள் பெரும்பாலும் In-goo தூங்கி விழுவது போன்றே ஆரம்பிக்கின்றன. போதுமான ஓய்வு இல்லை, Boss, பணம், குடும்பத்தின் மீது இருக்கும் அக்கறை தன் மீது இல்லை. ஏன் தன்னுடைய Boss மீது அத்தனை விசுவாசம் என்பதை தனது நண்பனிடம் சொல்கிறான். ஆனால் விசுவாசத்திற்கு மதிப்பு இல்லை என்று உணரும் நாள் வரும் என்பதை In-goo அறிவதில்லை.
கொரியா படங்களில் சிறப்பம்சமான காட்சியமைப்பு இந்த படத்தின் பெரும்பலம். Action காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளன.
In-goo வாக நடித்திருக்கும் Sang Kang-ho தற்கால தென் கொரிய நடிகர்களில் மிக பிரபலமானவர். Gangster ஆக நடித்தாலும் பார்வையாளர்களை கண்ணில் நீர் வர சிரிக்க வைக்கும் காட்சிகளிலும் வெளுத்து வாங்குவார். குடும்ப தலைவனாக நம் கண்களை குளமாக்குவார்.
The Show Must Go On நிச்சயம் ஒரு தனித்துவமான Gangster படம். கதா நாயகன் In-gooவை சுற்றியே கதை நகர்கிறது. In-goo வின் செயல்களும் அதன் எதிர் வினைகளுமே படம். ஆனாலும் In-goo வின் மனைவி, மகள், நண்பன், Boss மற்றும் அவருடைய தம்பி என்று திரையில் தோன்றும் அனைவரும் அட்டகாசமான ஒரு performance குடுத்து விட்டு போகிறார்கள்.
புலிவாலை பிடித்தவன் அவ்வளவு எளிதாக அதை விட்டு விட முடியாது. ஒரு Gangster என்பவன் புலிவாலை பிடித்து கொண்டிருப்பவன். அமைதியாக வாழ வேண்டும் என்ற கனவு கானல் நீர் போல தோன்றி மறையும். இங்கே In-goo எதை இழந்து எதை பெற்றார் என்பதே The Show Must Go On.
No comments:
Post a Comment