Friday, 4 November 2016

Cruel Winter Blues - குரோதத்தை வெல்லும் அன்பு


The Godfather படத்தை நீங்கள் பார்த்திருக்கும் பட்சத்தில் ஒரு gangster படம் என்றால் உங்கள் மனதில் சில எதிர்பார்ப்புகள் இருக்கும். Scarface, Goodfellas, Donnie Brasco, Road to Perdition, American Gangster போன்றவை கட்டாயம் பார்க்க வேண்டிய gangster திரைப்படங்கள்.

ஆசிய சினிமாவில் ஹாலிவுட்க்கு சற்றும் சளைக்காமல் அனைத்து வகைகளிலும் படம் எடுப்பதில் வல்லவர்கள் தென் கொரிய இயக்குனர்கள். a bittersweet life, A Dirty Carnival, Nameless Gangster என்று அவர்களும் அட்டகாசமான Gangster திரைப்படங்களை எடுத்திருக்கின்றனர்.

Cruel Winter Blues ஒரு gangster திரைப்படம் தான். ஆனால் மேலே நாம் பேசிய படங்கள் எது போலவும் இல்லாமல் வேறொரு பாதையில் பயணிக்கிறது இப்படம்.

ஆரம்ப காட்சியில் subway போல இருக்கும் ஒரு இடத்தில் ஒருவன் வேகமா ஓடுகிறான். எதிரில் ஊர்வலம் ஒன்று சென்று கொண்டிருக்க அவர்களில் புகுந்து விரைகிறான். அவனை முகமூடி அணிந்த ஒருவன் துரத்துகிறான். பின்னர் எதிரில் இருந்து வந்த ஒருவன் அவனை மடக்கி கத்தியால் குத்துகிறான். தொடர்ந்து வந்தவனும் குத்துகிறான். வாயில் ரத்தம் வழிய குத்தப்பட்டவன் யாரையோ எதிர்பார்த்து சரிந்து விழுகிறான்.

இந்த முதல் காட்சி தான் இந்த படத்தின் ஆதார காட்சி. இந்த காட்சி படத்தில் மீண்டும் மீண்டும் வருகிறது. ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் நமக்கு படத்தின் கதை மாந்தர்கள் பற்றி அதிகம் சொல்லுகிறது.

இதற்கு அடுத்து வரும் காட்சி The Godfather படத்தை நியபகப்படுத்தும் ஒரு party. அங்கு குழுமியிருக்கும் gang ன் பல படிநிலைகளில் இருக்கும் அனைவரையும் காட்சி படுத்திய பின் கதைக்குள் நுழைகிறது.

Jae Mun gang ல் இடை நிலையில் இருக்கும் ஒரு Gangster. சிறை சென்று மீண்டவன். தனது தலைவனிடம் பேசி எதிர் gang ல் இருக்கும் ஒருவனை கொல்ல அனுமதி வாங்குகிறான். நண்பனை கொன்றதற்கு பழிக்கு பழி வாங்க போவதாக கூறுகிறான். தலைவருக்கு இதில் உடன் பாடு இல்லை என்றாலும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறார்.

Jae Mun தனது உதவியாளன் Chi Guk உடன் ஒரு இரவு முழுவதும் பயணம் செய்து Seoul ல் இருந்து Bulgyo என்ற சிற்றூருக்கு செல்கிறான். கடை போடுகிறோம் என்கிற பாவனையில் அங்கே ஒரு வாரத்தில் வர இருக்கும் Dae Sik ஐ கொல்வதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

Chi Guk ஒரு முன்னால் Taekwondo வீரன். அதில் சோபிக்க வழியில்லாமல் gang ல் சேர்ந்தவன். Jae Mun ஐ குருவாக நினைக்கிறான். அவன் இவனை அடிக்கும் போதும், திட்டி அவமான படுத்தும் போதும் பொறுமையாக வாங்கி கொள்கிறான். ரெண்டு பேருக்கும் இடையில் முரண் பாடுகள் நிறைய இருந்த போதிலும் Jae Mun க்கு உதவி செய்யவே தான் உடன் வந்திருப்பதை உணர்ந்து நடந்து கொள்கிறான்.

Dae Sikன் அம்மா அந்த ஊரில் ஒரு சாப்பாட்டு கடை நடத்துகிறார். அங்கே சென்று இருவரும் சாப்பிடுகிறார்கள். அவர் ஒரு ரகளையான ஆள். Jae Mun பேசுவதற்கு பதில் சொல்லி அவன் வாயினை அடைக்கிறார்.

பின்னர் ஒரு முறை அருகில் இருக்கும் ஊருக்கு பஸ்சில் போக இருந்தவரை  Jae Mun தன்னுடைய காரில் கட்டாயப்படுத்தி அழைத்து செல்கிறான். அவர் தன்னுடைய மகனை பார்க்க செல்கிறார் என்று இவன் யூகிக்கிறான். ஆனால் அவர் தன்னுடைய இன்னொரு மகனுக்கு புத்தகம், துணி எல்லாம் வாங்கி அனுப்புகிறார். உடன் வந்ததற்கு Jae Mun க்கு பல வண்ண பூக்கள் படம் போட்ட சட்டை ஒன்றை வாங்கி கொடுக்கிறார்.

படத்தின் பெயரில் Cruel இருந்தாலும் இவர்களுக்கிடையில் நடக்கும் காட்சிகள் உங்களை வாய் விட்டு சிரிக்க வைக்கும். இந்த பகுதியில் ஒரு gangster எத்தகைய ஆள் என்பதை உணர்த்த ஒரு காட்சி வருகிறது. அது ஒரு CCTV கோணத்தில், அல்லது birds eye view வில் இருக்கிறது. இது போல 10 நொடி காட்சியில் ஒரு கதா பாத்திரத்தின் குணத்தை, பின் புலத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் கொரிய படங்களின் சிறப்பு.

அதற்கு அடுத்த நாள் Dae Sik ஊருக்கு வருகிறான். Jae Mun, Chi Guk இணைந்து காய்களை நகர்த்துகிறார்கள்.

மறுநாள் Dae Sikன் அம்மா Jae Mun யிடம் தன்னை harbour க்கு அழைத்து செல்லுமாறு கேட்கிறார். முதலில் மறுக்கும் Jae Mun பின்னர் அழைத்து செல்கிறான்

Jae Mun Dae Sik யை கொன்றானா?! Dae Sik ன் அம்மா Jae Mun எதற்காக அந்த ஊருக்கு வந்திருக்கிறான் என்பதை கண்டு கொண்டாரா?! Chi Guk இழந்து விட்ட தனது சுயத்தை மீட்டானா?! Dae Sik வரும் போது விருந்து வைக்க அந்த அம்மா வளர்த்த நாய் என்ன ஆனது?!  படத்தை ஒரு முறை பாருங்கள்.

Jae Mun தான் கதா நாயகன் அல்லது மைய கதா பாத்திரம் என்பதை ஏற்று கொள்ளவே ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. ஒரு கதா நாயகனுக்குரிய எந்த குணமும் அவனுக்கு இல்லை. தான்  சொல்வது அனைத்தையும் Chi Guk கேட்க வேண்டும், அனுமதிக்கும் போது தான் சிரிக்க வேண்டும் என்கிறான்.  பார்வையாளர்களை எரிச்சல் படுத்தும் அளவுக்கு Jae Mun நடந்து கொள்கிறான். ஆனால் அது தான் அந்த கதா பாத்திரத்தின் வெற்றி என்று நாம் உணரும் போது படம் முடிந்து இருக்கும்.

இப்படி கதா பாத்திரங்களை Takeshi Kitano நடித்து இருக்கிறார். எனினும் இங்கே Jae Mun ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டே அவர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார்.

நம்மூரில் மனோரமா ஆச்சி செய்த ஒரு role போல தோன்றினாலும் Dae Sik ன் அம்மாவாக நடித்து இருக்கும் பாட்டியின் நடிப்பு 10000 வாலா பட்டாசு. இப்படி ஒரு முக்கியத்துவம் உள்ள பெண் கதா பாத்திரத்தை திரைப்படங்களில் பார்த்து பல காலமாகி விட்டது. 'அம்மா என்றால் அன்பு' என்பதற்கு உதாரணமாக இருக்கிறார். Jae Mun தன்னுடைய இன்னொரு மகன் என்றே சொல்கிறார். அவர் எந்த சூழ் நிலையில் அதை சொல்கிறார் என்பதை பார்த்த உடன் உங்கள் மனதில் இந்த கதா பாத்திரம் நிரந்தரமாக தங்கி விடும்.

இது ஒரு பழி வாங்கும் கதை என்று ஒரு வரியில் சொல்லி கடந்து செல்ல முடியாத அளவுக்கு முக்கியமான திரைப்படம். இது இப்படத்தின் இயக்குனருக்கு முதல் படம் என்பது இன்னும் ஆச்சரியம். அவருடைய இரண்டாவது படம் The Man from No where என்ற அட்டகாசமான action படம்.

Method Acting வகை நடிக்கும் முறை உலகம் முழுதும் பின்பற்ற படுகிறது. Marlon Brando, Di Niro, Al Pacino, Daniel Day Lewis அதனை உயிர் மூச்சாக கொண்ட நடிகர்கள். ஆனால் ஒரு புதிய ரசிகருக்கு அவர்கள் மீது அவ்வளவு எளிதில் ஏற்படாத ஒரு ஈர்ப்பு, பிரமிப்பு கொரிய நடிகர்களை பார்க்கும் போது ஏற்படும்.  திரையில் அழுவதற்கு அவர்கள் தயங்குவதே இல்லை. ரத்தமும் சதையுமாக என்பதையெல்லாம் தாண்டி ஒரு வெறித்தனமான performance கொரிய படங்களில் அதிகம் காண முடிகிறது. Cruel Winter Blues அத்தகைய performance கடைசி 20 நிமிடத்தை ஒரு துன்பியல் நாடகத்தின் இறுதியில் கிடைக்கும் cathartic அனுபவத்தை அளிக்கிறது.

பொறுமையாக பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம், உங்கள் நேரத்தை கொடுக்கும் போது நிச்சயம் உங்களை அசர வைக்கும்.

For More Details - http://www.imdb.com/title/tt0969367/?ref_=nv_sr_1


No comments:

Post a Comment