போதை பொருட்களை விற்று பெரும் பணக்காரர்களாகி பின் அழிந்து போகும் மனிதர்களை பற்றிய கதைகள் எப்போதுமே விறுவிறுப்பானவை. மிக மிக சராசரியான வாழ்க்கை வாழும் பெரும்பாலான மனிதர்களுக்கு இவ்வகை குற்றக்கதைகள் ஒரு வகை vicarious pleasure ஐ அளிக்கின்றன. Breaking Bad series ன் படைப்பாளி Vince Gilligan "Be regular and orderly in your life, so that you may be violent and original in your work" என்று பிரெஞ்ச் எழுத்தாளர் Flaubert சொன்னது தனக்கு பொருந்தும் என்கிறார்.
ஒரு படைப்பாளிக்கு அது பொருந்தும் என்னும் போது வாசகனுக்கும், பார்வையாளனுக்கும் அது பொருந்தும். ஒரே சீராக பயணிக்கும் நவீன வாழ்க்கையில் இது போன்ற கதைகள் கொஞ்சம் சுவாரசியத்தை கொண்டு வருகின்றன. அதே சமயம் நமக்கு பயத்தையும், படப்படப்பையும் நம்முடைய வாழ்க்கை எத்தனை பாதுகாப்பானது என்கிற உணர்வையும் அளிக்க தவறுவது இல்லை.
The Godfather திரைப்படம் Gangster Genre ல் ஒரு bench மார்க் படம். அதன் reference இல்லாமல் ஒரு Gangster படம் எடுக்க முடியாது. அதில் போதைப்பொருள் தொழிலில் தனக்கு உடன்பாடு இல்லை என்று அதை செய்ய மறுக்கும் Vito Corleone பல இழப்புகளுக்கு பின் தன்னுடைய குடும்பத்தின் அனுமதியை அத்தொழிலுக்கு அளிக்கிறார்.
Al Pacino நடித்த Scarface எந்த பாசாங்கும் அற்ற ஒரு Gangster படம். "He loved the American Dream With a Vengeance" என்பது தான் படத்தின் tag line. கதா நாயகன் கியூபா வில் இருந்து அமெரிக்கா வந்து அங்கே போதைப்பொருள் தொழிலில் பெரும்பணம் ஈட்டி பின் தொழில் தொடர்புகளை பகைத்துக்கொண்டு மாண்டு மறையும் கதை.
இதை போல எதிர் கதாநாயகனை மையமாக கொண்ட, போதைப்பொருள் விற்பனையை பின்புலமாக கொண்ட பல படங்களை சுட்டிக்காட்ட முடியும். American Gangster முதலில் நினைவுக்கு வரும் படம், Maria Full of Grace, Blow, American Made போன்றவை மற்ற படங்கள். இவற்றுள் பெரும்பாலானவை Based on a True Story என்பது இவற்றுக்கு கூடுதல் கவர்ச்சி தருகிறது.
Netflix வெளியிட்ட Narcos என்னும் வலைத்தொடர் சர்வதேச பார்வையாளர்களை கொண்டுள்ளது. அதன் முதல் இரண்டு season கொலம்பியா வில் வாழ்ந்த Drug Lord Pablo Escobar பற்றியது.
போதைப்பொருள் பற்றிய Hollywood படங்களில் அவை கொலம்பியா வில் இருந்து வந்ததாகவே காட்டப்பட்டு வந்தது. பின்னர் Mexico. Breaking Bad TV series ல் அமெரிக்க போதைப்பொருளுக்கு போட்டியாக மெக்ஸிகோ நாட்டு போதைப்பொருள் cartel இருப்பதாக வருகிறது. அல்லது அவர்களுக்கு போட்டியாக இங்கே இவர்கள் கடை திறக்கிறார்கள்.
இப்படி என்றென்றைக்கும் கதைக்கான பின்புலத்தை தரும் போதைப்பொருள் வணிகம் எப்படி தொடங்கியது என்பதை ஒரு ஆவணப்பட தன்மையோடும், பழங்குடி ஆசார, கலை, நம்பிக்கைகளோடும் சொல்லியிருக்கும் படம் தான் Birds of Passage.
வருடம் 1968. கொலம்பியா வில் உள்ள Wayuu என்னும் பழங்குடி மக்கள் வாழும் பகுதி. வானம் பார்த்த பூமி. நம்ம ஊர் கரிசல் காடு போல இருக்கிறது. மேய்ச்சல் தான் பிரதான தொழில். இங்கே வாழும் மக்களின் ஒரு பண்பாட்டு நிகழ்ச்சியுடன் படம் தொடங்குகிறது.
Wayuu இனத்தின் Pushaina எனும் கிளை பிரிவை சேர்ந்த Ursula எனும் பெண்ணின் மகள் Zaida பருவமடைந்து திருமணத்திற்கு தயாராக இருக்கிறாள் என்பதை அறிவிக்கும் சடங்கு அது. கதையின் நாயகன் Rapayet அதில் கலந்து கொள்கிறான். Zaida வுடன் நடனமாடி தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்கிறான். Rapayet குடும்பம் தன்னுடைய குடும்பத்திற்கு நிகரான மதிப்பு கொண்டதில்லை என்று Ursula பெண் தர மறுக்கிறாள். Rapayet ன் மாமா சமரசம் செய்கிறார். பின்னர் Rapayet 5 மாடு, 30 ஆடுகள், 5 necklace வரதட்சிணை கொடுத்து Zaida வை திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறாள்.
Rapayet த்திடம் அவ்வளவு பணம் இல்லை என்பது Ursula விற்கு தெரியும். Rapayet பணம் சம்பாரிக்கும் முனைப்போடு இருக்கையில் ஒரு வாய்ப்பு அவனைத்தேடி வருகிறது.
இரண்டாம் உலகப்போருக்கு பின் அமெரிக்கா மொத்த உலகத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றது. பொருளுதவி, ஆயுத உதவி என்று கொடுத்த அந்த நாடுகளை தனது வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தி கொண்டது. இதில் ரஷ்ய தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்வது, அப்படி ரஷ்யாவிடம் உதவி பெரும் நாடுகளை communist நாடுகள் என்று குற்றம் சாட்டி அங்கே உள்நாட்டு கிளர்ச்சி கலவரம் என்று ஏற்படுத்தி தனக்கு சாதகமான ஒரு அரசை கொண்டு வருவது, இப்படி தென் அமெரிக்காவில் பல banana republic களை அன்று அமெரிக்கா உருவாக்கியது. அதில் கொலம்பியாவும் ஒன்று.
அப்படி நாடுகளில் அமெரிக்க Peace Corps ஐ சேர்ந்தவர்கள் communist aggression னுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவார்கள். அப்படி பிரச்சாரம் செய்ய வந்தவர்களில் சிலர் கொலம்பிய Marijuana அல்லது கஞ்சா கிடைக்குமா என்று பார்க்கிறார்கள். அவர்களுக்கு Rapayet கஞ்சா வாங்கி கொடுத்து பணம் ஈட்டுகிறான். அந்த பணத்தை வைத்து Zaida வை மணம் புரிய தேவையான வரதட்சிணை கொடுத்து அவளை தனதாக்கி கொள்கிறான்.
Bill என்னும் அமெரிக்கன் மேலும் கஞ்சா கொண்டு வந்து தந்தால் அதிக பணம் தருவதாக சொல்கிறான். இப்படியாக அமெரிக்காவுடனான கொலம்பிய போதைப்பொருள் வணிகம் தொடங்குகிறது. Rapayet ன் நண்பன் Moises alijuna என்னும் பழங்குடி இனத்தை சேர்ந்தவன். அவனுடன் சேர்ந்து Rapayet தொழில் செய்வது Rapayet ன் மாமியார் Ursula விற்கு பிடிக்கவில்லை.
Ursula ஒரு Matriarch. அவள் Rapayet மீது முற்றதிகாரம் செலுத்துகிறாள். தன்னிடம் கஞ்சா வாங்கும் அமெரிக்கர்கள் அங்கே உள்ள வேறு சிலரிடமும் வாங்குகிறார்கள் என்று தெரிந்து Bill ஐ வர சொல்லுங்கள் பிறகு தொழில் செய்வதை பற்றி பேசுவோம் என்கிறான் Rapayet. இங்கே Rapayet ன் நண்பன் Moises ஒரு தவறு செய்கிறான். அதை Rapayetத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கஞ்சா தொழில் செய்து தங்கள் முன்னோர்கள் யாரும் சேர்த்திடாத அளவு பணம் சேர்த்து விட்டாலும் அவர்கள் கடைபிடித்த அறம், தர்மங்களை கைவிட Rapayet தயாராக இல்லை. ஆனால் Moises அப்படி இல்லை. பணம், குடி, கேளிக்கை தான் அவன் வாழ்க்கை. அவனுக்கென்று எந்த கொள்கையும் இல்லை.
இந்நிலையில் Moises தொழிலை விட்டு விலக்கப்படுவதாக Rapayet அறிவிக்கிறான். இதிலிருந்து படம் இருண்ட திசையில் செல்கிறது. ஒரு புறம் நிறைய பணம் சம்பாதித்து நிறைய வசதி வாய்ப்புகளை பெற்றாலும் தாங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து மிக விலகி வந்துவிட்டதாக அனைவரும் உணர்கிறார்கள்.
பழங்குடிகளாக இருந்த போது அவர்கள் உள்ளுணர்வு விழிப்பு நிலையில் இருந்தது. ஒவ்வொரு மாற்றத்தையும் நுட்பமாக புரிந்து கொள்ளுமிடத்தில் இருந்தார்கள். முக்கியமாக பறவைகைளிடம் இருந்து வரும் சமிஞ்கை. அதிலிருந்து அந்நியப்பட்டு வந்து விட்ட பிறகு அதை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்குகிறார்கள். பறவைகளை வைத்து படத்தில் பல காட்சிகள், கனவுகள், உரையாடல்கள் உள்ளன. Hence, Birds of Passage எனும் Title.
ஒரு மோதலுக்கு பிறகு சமரசம் ஏற்பட்டு ஒரு 7 வருடங்கள் பிரச்சினை இல்லாமல் போகும் போது வாலிபனாக வளர்ந்து நிற்கும் Zaida வின் தம்பியால் பிரச்சினை வருகிறது. Leonidas எனப்படும் அவன் கஞ்சா விற்று வந்த பணத்தில் செழிப்பாக வளர்ந்தவன். அவனுக்கு வாழ்வில் எந்த நோக்கமும் கிடையாது. தான் வேண்டியது வேண்டும். இல்லாவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்கிற ஆள்.
Ursula குடும்பத்தின் இறுதி அத்தியாயம் Leonidasஆல் தொடங்கி வைக்கப்படுகிறது. போதைப்பொருள் வணிகத்தின் details படத்தின் பிரதானம் அல்ல. அதன் மூலம் வரும் வருமானம் என்ன மாதிரி அந்த மனிதர்களை மாற்றி அமைக்கிறது என்பது தான். பணத்தின் மூலம் கிடைக்கும் பலம், அகங்காரம் எப்படி அவர்களின் அழிவிற்கு இட்டு செல்கிறது என்று காண்கிறோம்.
தென் அமெரிக்க இலக்கியம் கதை சொல்லும் முறையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. கொலம்பிய நாட்டு எழுத்தாளர் Gabriel Garcia Marquez அதன் பிதாமகர். அவருடைய தாய் வழி பாட்டி இந்த படத்தில் காட்டப்படும் Wayuu Tribe ஐ சேர்ந்தவர் என்பது இணையத்தில் கண்ட தகவல். மாய யதார்த்தம் (magical realism) என்று அழைக்கப்பட்ட அவருடைய கதை சொல்லல் தன்மையை நீஙகள் Birds of Passage படத்திலும் காணலாம். Pan's Labyrinth மற்றும் The Shape of Water போன்றவை magical realist படங்களே.
Birds of Passage வணிக நோக்கம் தாண்டி படம் கலைப்படைப்பாகவே உருவாக்க பட்டிருக்கிறது. பல விருதுகளையும் வென்றுள்ளது. படத்தின் இசை, அதன் காட்சி வெளி, அதன் மனிதர்கள் அனைத்தும் அந்த Wayuu இன மக்களின் வாழ்க்கை பதிவாக இருக்கிறது.
நாம் அதிகமும் சினிமாவில் காண்பது 1980களுக்கு பிறகான குற்ற உலகையே. Birds of Passage அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னால் அந்த உலகம் எப்படி உருவாகியது என்று பதிவு செய்திருக்கிறது.
No comments:
Post a Comment