Monday, 25 December 2023

The Element Chapter 9 - Provisions

The Element 


Chapter 9 - Provisions 


Super Market Culture வந்த பிறகு பட்டியல் எழுதிக்கொண்டு போய் மளிகை கடையில் கொடுத்து வாங்கும் பழக்கம் குறைந்திருக்கிறது. அவ்வப்போது வாங்கிக்கொள்பவர்கள் இருக்கிறார்கள். Offer என்று அள்ளிக்கொண்டு வருபவரும் இருக்கிறார்கள். 


Corona காலத்தில் பொருட்களை வாங்கி பதுக்கும் வேலையை அனைவரும் செய்தனர். வேண்டிய பொருள் கிடைக்கா விட்டால் என்ன செய்வது? அப்படி உயிர் வாழ இன்றியமையாத பொருள் எது? 


Corona காலத்தில் நாங்கள் கிடைத்தவற்றை வாங்கிவைத்துக்கொண்டு

வழக்கமான உணவு போக midday snacks, evening snacks கையிலிருந்த கருப்பட்டி தீரும் வரை சுவையான கருப்பட்டி காஃபி போட்டு குடித்துக்கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு சினிமா பார்த்தோம். Breaking Bad எல்லாம் அப்போது பார்த்தது தான். 


பின்னர் ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்த போது கையில் கொண்டு செல்ல முடிவதை மட்டும் எடுத்துக்கொண்டு கோவில்பட்டி வந்துவிட்டோம். தூத்துக்குடி திரும்ப 3 மாதம் ஆனது. உளுந்து வைத்திருந்த பாத்திரத்தில் வண்டு பறந்து கொண்டிருந்தது. வத்தல், அரிசி, அனைத்திலும் வண்டு, புழு குடியேறியிருந்தது. புதிதாக குடி வந்த போது செய்தது போல மீண்டும் முதலிலிருந்து தொடங்கினோம். 


இது தந்த அனுபவத்தில் ஒரு மாதத்திற்கு மேல் தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைப்பதில்லை. எனது நண்பரின் தந்தையை bus ஏற்றிவிட்டு D Mart சென்ற போதும் மிக குறைவாக வாங்கிக்கொண்டு மாதம் பிறந்த பிறகு மீண்டும் வருவோம் என்று திரும்பி வந்துவிட்டோம். 


மழையால் காய்கள் வாங்கவில்லை, அரிசி, பருப்பு போதும் என்றே நினைத்துக்கொண்டிருந்த போது தான் 3 மாத குழந்தை, அவனின் அம்மா மற்றும் சித்தியோடு எங்கள் வீட்டிற்கு வந்தான். 


அவன் வந்த இரவு மனைவி இட்லி செய்தாள். தோசை மாவும் சீக்கிரம் காலியாக போகிறது என்று நினைத்தேன். மாவுக்கும் பாலுக்கும் இந்த தண்ணிக்குள்ள இறங்க வேண்டி வரும் போலையே என்று வெள்ளத்தை பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தேன். 


மறு நாள் காலை எளிமையா சமையலை முடிப்போம் என்று வெண் பொங்கல் மற்றும் சாம்பார் வைத்தாள். நான் மாடியில் சென்று நின்று வானத்தையும் வெள்ளத்தையும், தெருவில் நடப்பதையும் பார்த்துக்கொண்டு இருந்தேன். மனைவி மாடிக்கு வந்து மெல்லிய குரலில் துவரம் பருப்பு காலி என்று சொன்னாள். 


அப்போது helicopter மேலே வட்டமடித்து கொண்டிருந்தது. நமக்கு ஏதாவது parcel போடுவாங்களா என்று கேட்டாள். இல்லை photo பிடிச்சு TVலயம் News Paperலயும் தான் போடுவாங்க என்றேன். 

 

No comments:

Post a Comment