Monday, 25 December 2023

The Element Chapter 8 - The Magic Bulb

The Element 


Chapter 8 - The Magic Bulb


தமிழ் நாட்டில் 10 முதல் 12 மணி நேரம் மின் வெட்டு இருந்த போது அதை நேரடியாக அனுபவிக்காமல் நான் பாண்டிச்சேரி, பெங்களூர் என்று படிப்பிற்காகவும், வேலைக்காகவும் 2 வருடங்கள் இருந்தேன். 


2012ல் இரண்டு வாரங்கள் சென்னையில் தங்கி வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அந்த நேரத்தில் தான் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் கடலுக்கு எதிர் திசையில் வடிவேலு மாதிரி குறுக்க மண்ணு லாரி வராம பாத்துக்கோ என்று ஓடுவதை பார்த்தேன். 


தமிழகமெங்கும் 12மணி நேர மின் வெட்டு என்றால் சென்னைக்கு மட்டும் 2 மணி நேரம் தான். அதில் ஒரு மணி நேரம் இரவு 1 மணி முதல் 2 மணி வரை. கொசு கொத்தி எடுத்துவிட்டது. அதே ஆண்டு நாங்கள் வீடு கட்டி paint அடிக்கவிட்டாலும் பரவா இல்லை என்று முதலில் வாங்கி வைத்த சாதனம் UPS. 


ஆட்சி மாறியது. தமிழகம் "மின் மிகை மாநிலம்" ஆனது. மின் பராமரிப்பு நாளில் 41/2 மணி நேரத்தில் UPS பல்லிளித்தது. முந்தைய ஆட்சியில் நிலவிய "power holidays" UPS கம்பெனியிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு UPS விற்பனை ஆவதற்கு செய்து கொண்ட ஏற்பாடு தான் என்கிற வதந்தி பரவியது. 


இந்த லஞ்சம் trailer தான். முழு picture இதோ என்று ஒரு பெரிய தொகை சொல்லபட்டு ஒரு ஊழல் வழக்கு வீதிக்கு வந்தது. பின்னர் அது ஒன்றுமில்லாமல் ஆனது. UPS பொருத்திய வீடுகளில் மின் கட்டணம் அதிகம் ஆனது. UPSம் OPSம் ஒன்னு. Main Power போனா வேலை செய்யும்னு jokes forwardல் வந்தது. இந்த UPS தேவை இல்லாத ஆணியோ என்று நினைக்கும் நாளும் வந்தது.


பாண்டிச்சேரி பல்கலைக்கழக விடுதியில் அறைக்கு இரண்டு plug pointல் எப்போதும் power இருக்கும். என்ன இயற்கை சீற்றம் வந்து மின் இணைப்பு போனாலும் அந்த இரண்டு pointல் plug in செய்து cell phone, lap top charge செய்யலாம். ஒவ்வொரு விடுதிக்கும் அப்படி ஒரு UPS setup செய்து வைத்திருந்தார்கள். தமிழக அரசு ஒரு போதும் அப்படி செய்யப்போவதில்லை. 


தூத்துக்குடிக்கு வீடு பார்த்து சென்ற போது வாங்க கூடாது என்று முடிவு செய்த பொருட்களில் UPSம் ஒன்று. அதென்ன ஒரு நாள் மின் வெட்டை கூட பொறுக்க முடியாத வாழ்க்கை. அப்படி என்ன comfort கேட்கிறது என்று ஒரு நினைப்பு. ஆனால் பையன் பிறந்த பிறகு, இந்த மழை வெள்ளத்திற்கு பிறகு அதை reconsider செய்யும் இடத்திற்கு வந்திருக்கிறேன். 


பையன் பிறந்து 5 மாதத்திற்கு பிறகு தான் தூத்துக்குடிக்கு வந்தான். அவன் தவழும் நாட்களில் இரவில் மின் வெட்டு ஏற்பட்டால் phone torch on செய்து விளக்கு பொருத்தி வைப்பதற்குள் பயந்து விடுகிறான் என்பதால் ஒரு back up power உள்ள bulb வாங்கினேன். 


அது full charge இருக்கும் போது மின் இணைப்பு துண்டிக்க பட்டால் 3 மணி நேரம் வெளிச்சம் தரும். என்ன பிரச்சினை என்றால் நாம் switch off செய்தாலும் 3 மணி நேரம் எரிந்து விட்டு தான் அணையும். இது என்ன டா புது design என்று தேவைப்படும் போது எடுத்து பொருத்துவதும் பின்னர் கழட்டி வைப்பதுமாக இருந்தேன். 


பையன் கொஞ்சம் வளர்ந்த பிறகு அந்த bulb வீட்டில் இருப்பதை மறந்தே விட்டேன். எதிர் வீட்டு குழந்தை வீட்டுக்கு வந்த நாளில் அந்த bulb மீண்டும் நினைவுக்கு வந்தது. அதில் எவ்வளவு charge இருக்கிறது என்று தெரியவில்லையே, இருந்தாலும்  எரியவிடுவோம் என்று எடுத்து பொருத்தினேன்.


18ம் தேதி இரவு சமையல் செய்து, உண்டு, பாத்திரம் கழுவி வைப்பது வரை அது எரிந்தது. பின்னர் அவ்வப்போது எரிந்தது. அது எப்படி என்றே தெரியவில்லை. சரி கழட்டி வைப்போம் வேண்டும் போது பொருத்துவோம் என்று எடுத்து வைத்தேன். 


மெழுகுவர்த்தி வெளிச்சமாக இருந்தாலும் நம் கையில் வைத்திருக்கும் போது அறையில் இருக்கும் வெளிச்சத்தை விட தலைக்கு மேலே ஒரு ஓரத்தில் வைத்தால் அறை இன்னும் ஒளிரும் தானே? அதை தான் அந்த bulb செய்தது. 


அந்த சிறிது வெளிச்சம் மழையால் இருண்ட அந்த இரவையும் அடுத்த இரண்டு பகல் மற்றும் இரவுகளையும் கொஞ்சம் தாங்கிக்கொள்ள கூடியதாக மாற்றியிருந்தது.

No comments:

Post a Comment