The Element
Chapter 2 - The Rains
10 வருடத்திற்கும் மேலாக ஞாயிறு காலை எழுந்தவுடன் கறிக்கடை வாசலில் போய் நிற்பதை தவிர்த்து வருகிறேன். ஞாயிறு தவிர எந்த நாளில் அசைவம் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதோ அன்று வாங்கிக்கொள்வோம்.
ஒன்று கடையில் இருக்கும் எக்கச்சக்க கூட்டம். இன்னொன்று மற்ற நாளில் இருக்கும் பொறுமை கறி வெட்டுபவருக்கு இருக்காது. இதனால் ஏன் இன்னைக்கு போய் கறி வாங்கினோம் என்று நொந்து கொள்ள வேண்டியது இல்லை.
அது மட்டுமல்ல ஞாயிறு பொது இடங்களான கடற்கரை, பூங்கா, theatre, உணவகம் என்று எங்கே செல்வதையும் தவிர்த்து விடுவேன். எங்கு போனாலும் கூட்டம். Bike park பண்ணி எடுக்க முடியாது. Auto கிடைக்காது. பொது போக்குவரத்து பற்றி கேட்க வேண்டாம். இதையே திங்கள் மாலையோ, புதன் மாலையோ செய்தால் எந்த இடையூறும் இன்றி எளிதாக செய்து விடலாம். சந்தேகம் என்றால் ஒரு செவ்வாய் மாலை உங்கள் குழந்தையை அழைத்துக்கொண்டு கடற்கரை, பூங்கா என்று எங்காவது சென்று பாருங்கள்.
அது போல காய்கறி வாங்கவும் ஞாயிறு காலை 11 மணி அல்லது மதியம் 2 மணி வாக்கில் தான் செல்வேன். பையன் பிறப்பதற்கு முன் மனைவி காய்கறி பார்த்து வாங்கி விடுவார், நான் பையை சுமப்பேன். இப்போது 3 பேரும் கிளம்பி சென்று வந்தால் அரை நாள் ஆகும். அதுவும் பையனை வெயிலில் கூட்டி செல்ல முடியாது. மாலை தான் செல்ல முடியும். அதற்குள் காய்கறி கடைசி மிச்சம் தான் கிடைக்கும். அதனால் வெயில் என்று பாராமல் 11 மணிக்கு சென்று விடுவேன்.
17/12/2023 அன்று காய்கறி வாங்க கிளம்பும் போது மழை கொட்டியது. சரி மதியம் 2 மணிக்கு போவோம் என்று வீட்டில் இருந்து விட்டேன். மதியம் 2 மணிக்கும் மழை அடித்து விளாசியது. நாளைக்கு வாங்கிக்கொள்வோமா என்றேன். இருப்பதை வைத்து நாளை கூட சமாளிக்கலாம் என்று மறுமொழி கிடைத்தது.
சரி ஒரு black teaய போடு என்று சொல்லி விட்டு ஜன்னலோரம் ஒரு Chairல் உட்கார்ந்து கொண்டு கால்களுக்கு ஒரு stoolஐ எடுத்துப்போட்டு நன்றாக நீட்டி உட்கார்ந்து கொண்டேன்.
No comments:
Post a Comment