The Element
Chapter 3 - The Electricity
16/12/2023 அன்று காலை washing machine போட்டிருந்ததால் தொட்டி தண்ணீர் குறைவாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு இருக்கும்போதே 17/12/2023 அன்று current போகவும் வரவுமாக இருந்தது.
பரவா இல்லையே இந்த ஊரில் இப்போது current போனால் உடனே திரும்ப வருகிறதே, அதுவும் மழை பெய்யும் போது என்று ஒரு 10 நிமிடம் தண்ணீர் motorஐ ஓட விட்டேன்.
பையன் பகல் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தான். Cell phoneல் charge இருந்தது. முதல் நாள் இரவு ஜிகர்தண்டா XX Netflixல் பார்க்க தொடங்கியிருந்தேன். அதை தொடர்ந்து பார்த்து முடித்தேன். முதல் ஜிகர்தண்டா விற்கு இது பல படி மேல். Head phoneஐ காதில் இருந்து எடுத்தால் வெளியில் மழை ஊற்றிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்கும். நம்ம பாக்காத மழையா என்று தொடர்ந்தேன்.
அன்று இரவு வரை மழை தொடர்ந்தது. 16 அன்றும் மழை விட்டு விட்டு பெய்திருந்ததால் துவைத்து போட்ட துணிகள் 2 நாட்கள் மழையில் கிடந்து ஊறிக்கொண்டிருந்தன. இனி விட்டால் அவை வீணாகி விடும் என்று one time rinse போட்டா ஓரளவு உலர்ந்து வந்து விடும், வீட்டிற்குள் காயப்போடலாம் என்று மீண்டும் washing machine ஐ ஓட விட்டேன். அதற்குள் இரண்டு முறை current போய் வந்தது.
Phoneல் மீண்டும் charge போட்டு இரவு உணவை முடித்து விட்டு, கமலி from நடுக்காவேரி படம் பாதியோடு நிற்கிறதே. கொஞ்சம் நல்லா இருந்ததே, தூக்கம் வரும் வரை அதை பாப்போம் என்று அதை தொடர்ந்தேன்.
இதற்கிடையில் மின் இணைப்பு போகவும் வரவுமாக இருந்தது. வீட்டில் UPS கிடையாது. மழை பெய்து குளிர்ந்து விட்டதால் fan சுத்தினாலும் சுத்தா விட்டாலும் ஒன்றும் வித்தியாசம் தெரியவலில்லை. மனைவியும் மகனும் தூங்கி விட்டார்கள்.
11 மணிக்கு படம் முடிந்தது. இன்னும் 2 நாளில் college reopen ஆகப்போகுது, இந்த vacation இப்படி முடிந்தது என்று எண்ணிக்கொண்டே தூங்க சென்றேன். அப்போது மின் இணைப்பு மீண்டும் துண்டிக்கப்பட்டது.
No comments:
Post a Comment