Saturday, 30 December 2023

The Element Chapter 17 - The Arrival

The Element 


Chapter 17 - The Arrival 


வண்டி உதறிக்கொண்டே நீரை விட்டு வெளியே வந்தது. நான் முதல் gearல் இருந்து மாற்றாமல்  accleratorஐ மிதித்துக்கொண்டு எவ்வளவு தூரம் சென்றேன் என்றே நினைவில்லை. 


பின்னர் மனைவியிடம் கேட்ட போது நீங்க தான் சொல்றீங்க வண்டி உதறுதுன்னு  எனக்கு என்னமோ எப்பவும் போல தான் இருக்கு என்றாள். என் மகன் அவன் அம்மாவின் மேல் காலை ஊன்றி நின்றுகொண்டு dash boardல் உடம்பை வைத்துக்கொண்டு கன்னத்தில் கைவைத்துக்கொண்டு ரோட்டை பார்த்துக்கொண்டு வந்தான். 


Highwaysல் ஏறி வண்டியை விரட்டினேன். எனக்குள் ஒரு சின்ன நடுக்கம் இருந்துகொண்டே இருந்தது. இதயம் சரசரிக்கும் அதிகமான வேகத்தில் அடித்துக்கொண்டே இருந்தது. Toll Gate வரை போய்ட்டா போதும் கண்டிப்பா signal கிடைக்கும் அதுக்கு பிறகு பிரச்சினை இல்லை என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே வண்டியை செலுத்திக்கொண்டிருந்தேன். 


வண்டியில் இருந்த diesel அளவை கொண்டு கோவில்பட்டி வரை செல்ல முடியும் என்று தெரிந்ததால் எங்கேயும் diesel போட நிறுத்த வேண்டாம் என்று நினைத்தேன். 


வண்டி toll gateஐ எந்த பிரச்சினையும் இல்லாமல் கடந்தது. இதயம் கிடந்து அடிப்பது சற்று தணிந்தது. வண்டி சீராக ஒரே வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இருந்தாலும் எனக்கு தீராத சந்தேகம். வண்டி நம்மை ஊர் சேர்க்குமா என்று. Toll Gateல் ஏராளமான மக்கள் தங்கள் உடமைகளுடன் நின்று கொண்டிருந்தனர். 


கடந்த 4 நாள் குப்பையை தூத்துக்குடியில் dispose பண்ண வழியில்லாமல் அதை disposable bagல் கட்டி எடுத்து வைத்திருந்தேன். தூத்துக்குடியில் இருந்து போதுமான தூரம் வந்து விட்டோம் என்று தெரிந்த பிறகு வண்டியை ஓரமாக நிறுத்தி அதை எடுத்து தூர எறிந்தேன். 


ஏதாவது நொறுக்குத்தீனி சாப்பிட்டால் நல்லா இருக்கும் என்ற நினைப்பு வரவே கீழ் ஈராலில் வண்டியை நிறுத்தினேன். குப்பையை தூர எரிய நிறுத்திய போதும், snacks வாங்க நிறுத்திய போதும் engineஐ off செய்யவில்லை. Off செய்த engine மீண்டும் on ஆகவில்லை என்றால்? ஊரிலிருந்து உதவி வர குறைந்தது 2 மணி நேரம் ஆகலாம். 


கீழ ஈராலில் காரை விட்டு நான் இறங்கவில்லை நீ போய் வாங்கிட்டு வா என்று மனைவியை அனுப்பிவிட்டு missed callகளுக்கு பதில் சொன்னேன். வீட்டிற்கு அழைத்து இரவுணவு சேர்த்து செய்யுங்கள் வந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னேன். நண்பரின் தந்தைக்கும் அழைத்து சொன்னேன். நாளைக்கு சாயங்காலம் எல்லாரும் வீட்டுக்கு வாங்க என்றார். 


இணையம் கிடைத்த போது whatsappல் பலர் விசாரித்திருந்தது தெரிய வந்தது அவர்களுக்கு பதில் போட்டேன். பின்னர் கோவில்பட்டி வீட்டிற்கு வரும் வரை எங்கேயும் நிறுத்தவில்லை. 


வீட்டிற்கு வந்து மனைவியும் மகனும் இறங்கி, பொருட்களை இறக்கி வைத்த பிறகு போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் வண்டியை திருப்பி நிறுத்தி விட்டு வந்தேன். என் மகன் என் அப்பா, அம்மாவிடம் அவனது பூனை பொம்மையை மியாவ் என்று சொல்லி அறிமுகம் செய்துகொண்டிருந்தான். 


நிறைவு


No comments:

Post a Comment