Wednesday, 27 December 2023

The Element Chapter 12 - The Ankle-Biter

The Element 


Chapter 12 - The Ankle-Biter 


எங்கள் மகனுக்கு 1 வயது 8 மாதம் ஆகிறது. இதில் சரி பாதியை அவன் அவனது அம்மா வழி பாட்டி வீட்டில் தான் கழித்திருக்கிறான். எங்கள் இருவரின் கூட்டு அறிவும், திறமையும் அவனை கவனித்துக்கொள்ள போதாமல் அவனுக்கு உடல் நலம் சீர்கெடும் போது அவர் வந்து இருவரையும் அழைத்து சென்று தேற்றி அனுப்பி விடுவார்கள். 


முழித்திருக்கும் நேரம் முழுவதும் maximum fun பண்ணுவது எப்படி என்பதிலேயே இருப்பான். தெரு முழுதும் வயதிற்கு ஏற்றார் போல் ஆட்களை உறவுமுறை சொல்லி நண்பர்கள் ஆக்கி வைத்திருக்கிறான். இந்த மழை நாட்களில் வீட்டுக்குள்ளே அடைத்து வைக்க வேண்டி இருக்குமே என்ற போது தான் எதிர் வீட்டு குழந்தை அவன் அம்மா மற்றும் சித்தியுடன் வந்தான். 


வீட்டிற்கு வரும் புதிய நபர்களுக்கு முதலில் தன்னுடைய பூனை பொம்மையை மியாவ் என்று சொல்லி அறிமுகம் செய்து வைப்பான். பின்னர் யானை பொம்மை, அதன் பின்னர் Teddy. அதை வைத்து அவர்கள் விளையாட வேண்டும் என்று எதிர்பார்ப்பான். 


அந்த குழந்தைக்கும் அவனுடைய பொம்மையை அறிமுகப்படுத்த விரும்பினான். பின்னர் அது முடியாது என்று தெரிந்த பிறகு குழந்தையின் அம்மாவிற்கும் சித்திக்கும் தாவி விட்டான். 


அவனுடைய தள்ளு வண்டி, cycle ரெண்டையும் எடுத்துக்கொண்டு 8 போட்டு காண்பித்தான். குழந்தை மீது கொண்டு போய் மோதி விடுவான் என்று அது இரண்டையும் மாடியில் கொண்டு போட்டேன். 


சாப்பிடும் போது cocomelon, chu chu tv, chutty kannama, loo loo kids என்று நூறு முறை மாறி வருவான். அன்று அந்த குழந்தை இருந்ததால் அவன் நினைப்பு அங்கே செல்லவில்லை. மேலும் அவன் அம்மாவின் போனில் மிக குறைவான charge தான் மீதி இருந்தது. 


19ம் தேதி காலையில் வெயில் அவ்வளவாக இல்லாததால் பெரும்பாலான முன் பகல் நேரத்தை மொட்டை மாடியில் செலவழித்தோம். அவனுடைய stroller மழையில் கிடந்து நனைந்து ஊறி காய்ந்திருந்தது. அவன் அவனுடைய கை வண்டியை தள்ள நான் stroller ஐ தள்ளி அவனை துரத்த என்று கொஞ்ச நேரம் விளையாடினோம். 


அவனுக்கு காலை உணவாக சப்பாத்தி கொடுக்க மாடிக்கு மனைவி வந்த போது தட்டில் உள்ள சப்பாத்திக்கு 20ற்கும் மேற்பட்ட காக்கைகள் பங்குக்கு வந்தன. இந்த மழைல இவங்களை நியாபகம் வச்சு யாரு சோறு வச்சிருக்க போறா என்றபடி மீதியிருந்த முதல் நாள் சோற்றை எடுத்துவைக்க சொல்லி என்னை பணித்தாள். 


நான் கீழே சென்று எடுத்துக்கொண்டு வந்து வைத்தேன். 10 அடி தூரம் நடந்துவிட்டு திரும்பும் போது ஒரு பருக்கை கூட மிச்சம் இல்லாமல் காணாமல் போயிருந்தது. 


வீட்டிற்குள் மீண்ட போது வழக்கமான நேரத்திற்கு பகல் தூக்கம் போடுவானா என்கிற சந்தேகம் இருந்தது. தொட்டிலில் கிடந்த குழந்தையை சுத்தி சுத்தி வந்தவன் desktopல் இருந்த system upsஐ சென்று on செய்தான். ஆகா இதுல phoneக்கு charge போடலாமேன்னு என்று இதுவரை நினைவுக்கு வரலையே என்று அதை உடனே அணைத்து விட்டு அவனை அங்கிருந்து தூக்கி சென்றேன். 


கொஞ்ச நேரத்தில் குழந்தையின் தாத்தா வர பகல் தூக்கம் போட தொட்டில் ஏறியவன் அவருடன் உரையாடலை தொடங்கி விட்டான். குழந்தையை அவர்கள் மாத்தி மாத்தி கொஞ்சி கொண்டிருந்த போது அவன் அம்மாவிடம் சென்று நீயும் தூக்கு என்பது போல பாவனை செய்தான். இவனை தூக்க சொல்கிறான் என்று நினைத்தால் குழந்தையை தூக்க சொல்லியிருக்கிறான். 


பின்னர் அவர்கள் கிளம்பும் நேரம் கண்டிப்பாக அழுவான் என்பதால் மாடிக்கு தூக்கி சென்று விளையாட்டு காட்டி கொண்டிருந்தேன். 


வீட்டிற்கு திரும்பியவுடன் 3 அறைகளையும் சுற்றி சுற்றி வந்தான். தம்பி, தாத்தா என்று தேடினான். 



No comments:

Post a Comment