Sunday, 22 May 2022

Another Round - அமுதென்றும் நஞ்சென்றும் ஒன்று

நீங்கள்  குடிப்பழக்கம் உள்ளவரா? உங்கள் முதல் கோப்பை மதுவை அல்லது பியரை எந்த வயதில் அருந்தினீர்கள்? எந்த சூழ்நிலையில் அருந்தினீர்கள்? இப்போது உங்கள் வயதென்ன? இப்போதும் மது அருந்துகிறீர்களா? எத்தனை நாளைக்கு ஒரு முறை? அல்லது தினமுமா? அப்படியென்றால் நீங்கள் இந்த Denmark நாட்டு படத்தை கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டும். 

உங்களுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லையா? நீங்கள் ஒரு Teetotaler அ? பியர் குடித்தால் உடம்பு வைக்கும், Wine குடித்தால் நிறம் கூடும் என்கிற நண்பர்களின் வியாக்கியானாங்களை கேட்டு வளர்ந்தவரா? நண்பர்கள் தண்ணியடிக்க நீங்கள் side dish தின்று கொண்டு அன்றைய நாள் முடிந்தவுடன் அவர்களை வீட்டில் சேர்க்கும் வேலையை செய்து இருக்கிறீர்களா?  நீங்களும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.

Martin 45 வயது மதிக்கத்தக்க உயர்நிலை பள்ளி ஆசிரியர். வரலாறு கற்பிக்கிறார். அவருடைய வாழ்க்கையில் ஒரு mid life crisis. முதல் காட்சியில் பள்ளி மாணவர்கள் குடித்து, கொண்டாடி, ஒரு போட்டி நடத்தும் காட்சி வருகிறது. அவர்களுடைய வயதிற்கே உரிய உற்சாகம், கட்டுப்பாடற்ற தன்மைக்கு மாற்றாக அடுத்த காட்சியில் ஒரு zombie போல நடந்து கொள்ளும் Martin வருகிறார். 

நம்முடைய பள்ளி, கல்லூரி நாட்களில் Martin போன்ற ஆசிரியர்களை நிச்சயம் கடந்து வந்திருப்போம். ஒரு காலத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டார் என்றும் இப்போது இப்படி ஆகிவிட்டார் என்றும் கதைகள் இருக்கும். Martin னால் பாடம் நடத்த முடியவில்லை, வேலையில் அவருக்கு கவனம் குவிய வில்லை. அவர் மேல்  புகார் கொடுக்க பெற்றோர் வருகின்றனர். 

சொந்த வாழ்க்கையிலும் அவருக்கும் மனைவிக்கும்மிடையே ஒரு estrangement வந்து விட்டதை உணர்கிறார், மகன்களிடமும் ஒரு அந்நியம் நுழைந்து விட்டது. இத்தகைய சூழ்நிலையில் பள்ளியில் அவருடன் வேலை பார்க்கும் Nikolaj பிறந்த நாளுக்கு, Tommy மற்றும் Peter உடன் உணவருந்த செல்கிறார். 

Nikolaj உளவியல் ஆசிரியர், Peter இசை கற்பிக்கிறார், Tommy உடற்கல்வி ஆசிரியர். நண்பர்கள் மூவரும் Martin னின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தை பற்றி கேட்கிறார்கள். Martin மது அருந்துவதில்லை என்பதை அறிந்து மனிதன் உடம்பில் 0.05% alchohol கம்மியாக பிறந்துள்ளான். அதனால் அதை மனிதன் உடம்பில் ஏற்றிக்கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். 

Martin னும் மது அருந்துகிறார். பின்னர் நண்பர்கள் நால்வரும் மது அருந்துவது பற்றி ஒரு தர்க்கத்தை உருவாக்கிக்கொண்டு, Hemingway இப்படி அளவாக குடித்தார், அதனாலேயே அவர் சிறப்பாக செயல்பட்டார். அதனால் நாமும் குடித்து ஒரு  பரிசோதனை செய்து பார்ப்போம், அதை ஒரு ஆராய்ச்சி கட்டுரையாக எழுதுவோம் என்று முடிவு செய்கிறார்கள். அதாவது 0.05% alchohol மட்டுமே அருந்த வேண்டும், அது அவர்களை என்ன செய்கிறது என்று கவனிக்க வேண்டும். 

புதிதாக GYM ல் சேர்ந்தவர்கள் அதிக உற்சாகமாக இருப்பார்கள். பின்னர் ஒரு மாதத்தில் பழையபடி மாறி விடுவார்கள். நமது மனது ஒவ்வொரு செயலுக்கும் பாராட்டும்  அங்கீகாரமும் எதிர்பார்க்கும். நாம் தினம் GYM க்கு செல்வதால் மக்கள் நம்மை தினம் வாழ்த்துவார்கள் என்று எதிர்பார்ப்பது நியாயமல்ல. அது போல நம்முடைய அன்றாட வேலைகளை செய்வதற்காக நமக்கு தினம் பாராட்டு கிடைக்கும் என்று நினைப்பது அபத்தம். 

அப்படியே  மக்கள் நம்மை பாராட்டினாலும் அது விரைவிலேயே சலித்து விடும். இது அப்படியே வளர்ந்து அவர்கள் நம்மை வழிபட வேண்டும் என்கிற இடத்தில் போய் தான் முடியும். 

நம்முடைய work life ஆரம்பகட்ட சுவாரசியத்திற்கு பின் போரடிக்க தொடங்கிவிடும். வேலைக்கு வெளியே நம்முடைய வாழ்க்கை நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். நாம் வேலை செய்யாத நேரத்தில் என்ன செய்ய போகிறோம் என்பதை நாம் முன்னரே திட்டமிட்டு வைத்திருக்க வேண்டும். 

இப்படி சொல்லலாம். நமக்கு மிக பிடித்த வேலையே கிடைத்தாலும் அது நாம் ஊதியத்திற்காக செய்யும் ஒரு பணி மட்டுமே. நாம் அதுவே அல்ல. அந்த வேலையே சமூகத்தில் நம்முடைய இடத்தை தீர்மானிக்கலாம். ஆனால் நம்முடைய அகம் அது நாம் அல்ல என்று நினைக்கலாம். 

இப்படி அக வாழ்க்கை பற்றிய அறிதல் இல்லாதவர்கள் தான் பெரும்பாலும் குடிக்க செல்கிறார்கள். அல்லது மொத்தமாக ஒரு குழு விளையாட்டை ரசிக்கிறார்கள். போலி சாமியார்களை வழி படுகிறார்கள், தான் நம்பும் அரசியல் வழி விடிவு வரும் என்று பேசியே மாய்கிறார்கள். 

இங்கே Another Round படத்தில் Martin மற்றும் அவரது நண்பர்களுக்கு அக வாழ்க்கை என்று ஒன்றும் இல்லை. அதனால் அவர்கள் அளவாக குடிப்பதை தேர்ந்தெடுக்கிறார்கள். முதலில் அவர்கள் எதிர்பார்த்ததிற்கும் அதிகமாகவே மது அவர்களை செயல் பட வைக்கிறது. 

உடற்கல்வி ஆசிரியரை வைத்து மிக உணர்ச்சிகரமான பகுதி படத்தின் நடுப்பகுதியில் வருகிறது. இந்த நான்கு நண்பர்களும் மது அருந்திவிட்டு தங்களை சுற்றி எழுப்பிய  அரண்களை உடைகிறார்கள். அதனாலேயே இயல்பாக அனைவருடனும் பழகி தாங்கள் கற்று கொடுப்பதை சிறப்பாக செய்கிறார்கள். 

இதன் பிறகு தான் உண்மையான சிக்கல் ஆரம்பிக்கிறது. அதை நீங்கள் படத்தில் பார்த்தால் தான் உணர்ந்து கொள்ள முடியும். 

Another Round அனைத்து நடுவயதினரும் பார்க்க வேண்டிய படம். நம்முடைய தொழில், புற வாழ்க்கைக்கு அப்பால் நமக்கு அக வாழ்க்கை ஒன்றை அமைத்துக்கொள்வது, உறவுகளை பேணுவது குறித்து நமக்கு ஒரு புது பார்வையை அளிக்கும் படம். Amazon Prime ல் காண கிடைக்கிறது. 

No comments:

Post a Comment