நான் அசைவம் விரும்பி சாப்பிடுவேன் என்றாலும் எல்லா ஞாயிறும் கட்டாயம்
வேண்டும் என்றெல்லாம் கேட்பதில்லை. கறிக்கடையில் வெட்டப்படும் கறி
நமக்கானது என்று தெரியும் போது என் நாக்கில் நீர் ஊறியது உண்டு.
சிறு வயதில் கோயில் கொடையின் போது மொத்தமாக வெட்டப்பட்டு பலி கொடுக்கப்பட்ட ஆடுகளை கண்ட போது கூட நான் பயந்ததில்லை. ஆனால் அந்த ரத்த வாடை ஒரு மாதிரி என்னை தடுமாற செய்தது நினைவிருக்கிறது.
என்னடா இது கொஞ்சம் கூட இந்த ‘உயிர்களிடத்தில் அன்பு வேணும்’ அப்படிங்கிற தத்துவம் வேலை செய்யாத ஆளா இருக்கனே என்று என்னைப்பற்றி ஒரு வருத்தமும் எனக்கு உண்டு.

பூகம்பம், சுனாமி, குண்டு வெடிப்பு, கொலை, விபத்துகள் இதையெல்லாம்
செய்தியா பார்த்து பார்த்து இரக்கம், பரிவு போன்ற உணர்ச்சிகளை கையாளும்
ழூளையின் பகுதி மழுங்கிருச்சோ என்று ரெம்ப நாளாக எனக்கு ஒரு சந்தேகம்
இருந்து கொண்டிருக்கிறது.
மழை பெய்து கண்மாய் நிரம்பும் காலங்களில் 7,8 வயது சிறுவனோ சிறுமியோ நீச்சல் பழக போய் உயிர் விட்ட செய்திகளை படிக்கும் போது எனக்கு அவர்களை பெற்றவர்கள் மீது தான் கோபம் வரும். பிள்ளைக்கு நீச்சல் சொல்லி தர்றத விட இவர்களுக்கு என்ன வேலை? கூடவே என் அப்பா நான் ஒழுங்காக தமிழ் எழுத படிக்க பழகுறதுக்கு முன்னாடியே எனக்கு சைக்கிள் மிதிக்கவும் நீச்சல் அடிக்கவும் கற்றுக் கொடுத்தது நினைவுக்கு வரும்.
சமீபத்தில் பெய்து ஒய்ந்த மழையில் எங்களது வீட்டிற்கு வெளியே மழைத்தண்ணி தேங்கிவிட்டது. மழை வெறித்த அந்த சாயங்காலம் என் அப்பா எதிர் வீட்டுக்காரரிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருப்பது கேட்டு என்ன என்று கேட்க வெளியே வந்தேன்.
எதிர்வீட்டுக்காரர் நிறைய கோழிகள் வளர்க்கிறார். அவரது வீட்டுக்கோழிகள் எப்போதும் புதிதாக இவ்வுலகத்திற்கு வந்த குஞ்சுகளுடன் வலம் வந்து கொண்டிருக்கும். 7,8 குஞ்சுகள் தாய்க்கோழி பாதுகாப்புடன் விளையாடிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடி ஓடி மண்ணை கொத்துவது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
என் அப்பா எதிர்வீட்டுக்காரரிடம் சொன்னது இது தான், ‘மழைக்கு கோழியெல்லாம் சுவர்ப்பக்கம் ஒதுங்கி அதுல ரெண்டு கோழிக்குஞ்சு தண்ணில முங்கி செத்து போச்சு.’ மேற்கொண்டு கேட்க என்னால் முடியவில்லை. என் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டேன்.

கறி - இயற்கை பேரிடர் - நீரில் மூழ்கிய சிறுவன் - மழைக்கு ஒதுங்கிய கோழிக்குஞ்சு. மிகவும் நேர்த்தியான கோர்வை
ReplyDelete