Thursday 28 December 2023

The Element Chapter 16 - The Way Home

The Element 


Chapter 16 - The Way Home 


20ம் தேதி பைக்கில் ஊரை சுற்றி பார்த்து விட்டு வந்து  மனைவியிடம் சீக்கிரம் கிளம்பு ஊருக்கு போகலாம் என்றேன். மாடிக்கு சென்று வெளியில் கிடந்த மகனின் வண்டிகளை உள்ளே கொண்டு வந்தேன். இதற்குள் சாரல் போட ஆரம்பித்திருந்தது.


நம்ம கார்லயே போறோமா என்றாள். ஆமா நேத்து வண்டி start ஆச்சு. இன்னைக்கும் start ஆகும். இனி நாளை வரை wait பண்ணுறது தேவையில்லாத risk. கிளம்பிடுவோம். Toll Gate வரை நம்ம வண்டி நம்மை கொண்டு போனா போதும் அதுக்கு பிறகு இதை ஓரமா போட்டுட்டு ஊர்ல இருந்து கூட வண்டி வர சொல்லலாம். 


மதிய உணவை முடித்து கிளம்ப 5 மணி ஆகியிருந்தது. ஒவ்வொரு பையாக எடுத்து வண்டியில் வைத்துக்கொண்டிருந்தேன். பையன் காரில் கிளம்புவது குறித்து உற்சாகமாக இருந்தான். House Ownerன் மனைவி ஏன் போறீங்க, நாளைக்கு உறுதியா current வந்திடும் நாங்க எல்லா உதவியும் பண்றோம் என்றார். 


2 நாள் கழித்து அன்று மாலை  பசும்பால் கொண்டு வரும் அண்ணன் வந்தார். அவரின் குரலில் ஒரு கவலை, நடுக்கம் இருந்தது. நாங்கள் ஊருக்கு செல்கிறோம் திரும்ப வந்த பிறகு தொடர்ந்து வாங்கிக்கொள்கிறோம் என்றேன். 


காலையில் house ownerன் மனைவி கொடுத்த பொருட்களை அவர்களிடமே கொடுத்து விட்டு வந்தாள். இங்க எல்லாம் கிடைக்கிறது கஷ்டமா இருக்கும் போது அவங்க கொடுத்ததை ஊருக்கு தூக்கிட்டு போறது நல்லா இல்லைல என்றாள். 


அப்போது tractorல் குடிதண்ணீர் கொண்டு வந்து விநியோகிக்க ஆரம்பித்திருந்தார்கள். House Ownerன் மனைவி எங்களிடம் குடம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டார். ஒரு 5 litre copper குடம் இருக்கிறது என்று என் மனைவி சொன்னாள். அது திருமணத்தின் போது அவளுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் ஒன்று. இல்ல அது வேண்டாம் என்று அவர் சொல்லவும் தோசை மாவு அரைத்து வைக்கும் பாத்திரம் 5 litre பிடிக்கும் இதை வச்சுக்கோங்க என்று கொடுத்தாள். 


மக்கள் குடங்களோடு நீரில் தத்தி தத்தி வந்தனர். நம்ம வண்டியை எடுக்கிற நேரம் இப்படி தண்ணிக்குள்ள குடத்தோட dozen கணக்குல மக்கள் நடமாடிட்டு இருக்காங்களே என்று பார்த்துக்கொண்டிருந்தேன். நம்ம வண்டி போய் அவங்க மேல தண்ணி பட்டா என்னவெல்லாம் சொல்லி திட்டுவாங்களோ என்று பயந்து கொண்டிருந்தேன். 


கதவை திறந்து வண்டியை கொஞ்சம் தள்ளி தண்ணீர் குறைவாக உள்ள இடத்தில் நிறுத்தி விட்டு இறங்கி வந்து கதவை சாத்தி விடுகிறேன் என்றேன். வேண்டாம் என் பையன் பூட்டிவிடுவான் நீங்கள் கிளம்புங்கள் என்றார் திருமதி House Owner. 


வண்டியை start செய்து பதை பதைப்போடு தண்ணீரில் இறக்கினேன். முதல் gearலேயே தெருவில் தேங்கியிருந்த தண்ணீரின் மீது ஊர்ந்து கடந்தேன். 


பாளையங்கோட்டை மெயின் ரோட்டிற்கு வந்த பிறகு ஒரு இடத்தில் காலையில் பார்த்ததை விட தண்ணீர் மிக அதிகமாக தேங்கியிருந்தது. வண்டி engineல் தண்ணீர் ஏறி விடுமோ என்ற பயம் ஏற்பட்டது. அப்போது எதிரில் Ashok Leyland Dost வண்டி ஒன்று வந்தது. அந்த வண்டி வந்த வேகத்தில் ஒரு அலை கிளம்பி வந்து என்னுடைய வண்டி bonnetல் மோதியது. 


Engine உதறத் தொடங்கியது. நான் first gear மாற்றி accleratorஐ ஓங்கி மிதித்தேன். அந்த வண்டி விலகி எனக்கு இடதுபுறமாக முன்னேறி சென்றது. மேலும் தண்ணீர் அடித்து வண்டி மேலும் உதற ஆரம்பித்தது. எனக்கு இதயம் பல மடங்கு வேகமாக அடித்து, காது சூடாகி, வியர்க்க தொடங்கியிருந்தது.

No comments:

Post a Comment