ஒரு திரைப்படம் பற்றி எதுவுமே தெரியாமல் பார்ப்பது தான் ஒரு திரைப்படத்தை எந்த முன்முடிவுகளும் இல்லாமல் ரசிக்க சிறந்த வழி.
அதனால் படத்தை பார்த்து விட்டு இந்த பதிவை படிப்பது படம் பற்றிய உங்கள் புரிதல், அனுபவத்தோடு என்னுடைய புரிதல் இணைந்து கொள்ள வசதியாக இருக்கும்.
Submarino என்பதற்கு அர்த்தம் அறிய அத்திரைப்படத்தின் imdb பக்கத்தில் உள்ள trivia sectionல் பார்க்கவும்.
Formative Years என்று கருதப்படும் teenage பருவம் ஒருவர் வாழ்க்கையில் என்னவாக போகிறார் என்பதை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. Infact, முதல் 15 வருடங்களில் ஏற்படும் அனுபவங்கள் தான் அடுத்த 45 வருடங்கள் அந்த நபர் எப்படியான மனிதனாக இருக்க போகிறார் என்பதற்கு அடித்தளம் இடுகிறது.
சட்டென தமிழில் நாயகன், நந்தா, காதல் கொண்டேன் ஆகிய படங்கள், Hollywoodல் Clint Eastwood இயக்கிய Mystic River போன்ற படங்கள் நினைவுக்கு வருகின்றன. இப்படங்களில் teenage தொடங்கும் வயதில் இருக்கும் கதையின் நாயகனுக்கு ஏற்படும் அனுபவங்கள் அவன் ஏன் வாழ்க்கையில் அப்படி இருக்கிறான் என்பதற்கு பதிலாக இருக்கின்றன.
இங்கே Submarinoவில் அண்ணன், தம்பி, அவர்கள் தங்கள் குட்டி தம்பியை பார்த்து கொள்ள, பெயர் வைக்க, பசியாற்ற எடுக்கும் முயற்சிகள், போதையில் வரும் அம்மாவை சமாளிக்கும் விதம் என்று முதல் 10 நிமிடம் நகரும் படம் சட்டென பார்வையாளர்களை உறைய வைத்து கதையின் நாயகனின் 30+ வயது வாழ்க்கைக்கு வந்து விடுகிறது.
Scarred for life என்று ஆங்கிலத்தில் ஒரு பதம் உண்டு, இங்கே Nick ஆகிய மூத்த சகோதரனுக்கு நடந்தது அது தான். அவன் தன்னை அறியாமல் செய்த ஒரு பிழைக்கு அவனை அவன் மன்னிக்க தயாராக இல்லை.
கெட்ட குடியே கெடும் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக நகரும் திரைப்படத்தில், Nick சிறைக்கு சென்ற காரணம் கூட நினைவின்றி இருக்கிறான். உடற்பயிற்சி செய்வது, beer குடிப்பது, தொந்தரவு செய்யும் பக்கத்து அரை வாசியை மூர்க்கமாக தாக்குவது என்று ஒரு நோக்கமில்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.
படம் 45 நிமிடங்கள் கடந்த பிறகு தான் Nick ன் தம்பியும் அவனுடைய மகனும் வருகிறார்கள். இந்த திரைக்கதை அமைப்பு Babel படத்தை நினைவு படுத்துவதாக இருந்தது. நாவல்களில் இது போல கதை கூறும் முறை எனக்கு தெரிந்து Tolstoy காலத்திலேயே வந்து விட்டது.
Nick ன் தம்பி போதை அடிமையாக இருக்கிறான் அனால் மகனை விட்டு பிரிய மனமில்லாமல் இருக்கிறான். Social service அவனுக்கு வளர்ப்பு தந்தை, தாயை தர முன் வரும் போதும் தன்னால் மகனை பார்த்து கொள்ள முடியும் என்கிறான்.
இதன் பின்னர் அவன் போதை ஏற்றி விழுந்து கிடந்து, நினைவு திரும்பி மகனை வந்து பார்க்கும் காட்சிகள் எல்லாம் மனதை பிசைபவை.
குற்றவாளிகளின் உலகை ஜாலியாக, சாகசமாக காட்டும் Tarantino பாணியில் உலகமே படமெடுத்து கொண்டு இருக்கும் போது இங்கே Submarino அவர்கள் வாழ்க்கை செல்லும் திசையை எந்த தீர்ப்பும் சொல்லாமல், பரிதாப பட வைக்காமல் காட்சி படுத்துகிறது.
Nick ஏதோ அசம்பாவிதம் நடக்க இருப்பதை உணர்ந்து தான் தனது சகோதரனை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறான், பின்னர் பேச முடியாமல் விரக்தியில் தனது கையை phone booth மீது குத்தி காயப்படுத்தி கொள்கிறான்.
இருவருக்கும் இடையில் இருக்கும் அந்த மௌனம் சிறு வயதில் நடந்து விட்ட அசம்பாவிதத்தால் ஏற்பட்டது. இருவரும் அது குறித்து பேச தயாராக இல்லை. அதை ஏற்றுக்கொண்டு Nick ன் சகோதரன் வாழ்ந்து கொண்டு இருக்கும் போது Nickற்கு அது சாத்தியமாவில்லை. அவன் அதை கடந்து போக முடியாமல் தவிக்கிறான். Nick ன் மௌனம், விரக்தி, கோபம், எல்லாத்துக்கும் பின்னால் அந்த இளவயது சம்பவமே காரணமாக இருக்கிறது.
Nick ன் சகோதரன் இனிமேல் Nickயை சந்திக்க போவதில்லை என்பது போல அந்த அசம்பாவிதம் Nickன் கவனக்குறைவால் ஏற்படவில்லை என்று சொல்லி விட்டு சொல்கிறான்.
Nick ன் மனதிலிருக்கும் ரணத்தை உணர்த்தும் விதமாக அவனது கையில் உள்ள காயம் ஆறாமல் இருக்கிறது. அவன் அதற்காக மருத்துவரிடம் செல்வதில்லை. மருத்துவர் வரும் போது காலம் கடந்து விடுகிறது.
Nick சிறுவர்கள் அருகில் இருக்கும் போது மென்மையானவாக மாறி விடுகிறான், தனது நண்பனிடம் தானும் குடும்பம், குழந்தை என்று வாழ வேண்டும் என்று ஆசை பட்டதையும் கூறுகிறான்.
தனது அம்மா இறந்த பின் வந்த பணத்தை பங்கு போடாமல் தனது தம்பியிடம் குடுத்து அவனுடைய மகனை நன்றாக வளர்க்க வைத்துகொள் என்று கொடுக்கிறான்.
நண்பன் ஒருவன் குற்றம் இழைத்து விட்டு தப்பித்து விட அதை ஏற்று கொண்டு சிறை செல்கிறான்.
தனியாக வாழும் முதியவர்கள், மகனை பிரிந்து வாழும் போதைக்கு அடிமையான Nick ன் தோழி, தனது தாயை 10 வருடத்தில் பார்த்தே இருக்காதா நண்பன் என்று படத்தில் வரும் கதா பாத்திரங்கள் வாழ்க்கையில் மீட்சி இருப்பதாக தெரியவில்லை.
எப்போதும் பெய்து கொண்டிருக்கும் பனி, Nickன் சிகரெட்டில் இருந்து எழும் புகை என்று காட்சிகளும் இருன்மையாகவே இருக்கின்றன.
Nick ன் தம்பியின் மகன் Martin, Zorrow பற்றி பேசுகிறான், அவர்கள் வீட்டில் Manhattan Skyline படம் இருக்கிறது, Junk food சாப்பிட்டு coke குடிக்கிறார்கள், super marketல் வாங்கி fridgeயை நிரப்புகிறார்கள். இதெல்லாம் எதுவும் குறியீடா என்று தெரியவில்லை.
தமிழ் நாட்டில் மது விலக்கு எந்த அளவுக்கு சாத்தியமோ அந்த அளவுக்கு தான் வளர்ந்த அல்லது அப்படி சொல்லி கொள்ளும் நாடுகளில் போதை மருந்து தடுப்பு சாத்தியம் போல.
Welfare State என்று அறியப்படும் Denmark ல் இருந்து இப்படி ஒரு சினிமா என்றால் Truth is stranger than fiction theory படி உண்மை நிலவரம் என்ன என்று தெரியவில்லை.
படத்தில் Nick சிறையில் இருக்கும் போது வக்கீல் அவனை சந்தித்து பேசும் விதம் போதும் அந்த நாட்டில் அரசின் பிரதிநிதிகள் மக்களை எப்படி அணுகுகிறார்கள் என்று அறிந்த கொள்ள, ஆனாலும் Nick போன்ற fallen angels எங்கேயும் இருக்கவே செய்வார்கள்.
படம் துன்பியல் யுகமாக நீண்ட பின்னர் ஒரு ray of hope உடனே நிறைவு பெறுகிறது.
ஒரு நல்ல திரைப்படம் என்பது ஒரு நாளாவது உங்கள் தூக்கத்தை கெடுக்க வேண்டும், உங்களை தொந்தரவு செய்ய வேண்டும் அதுவே உங்கள் ரசனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும். உங்களை பண்பட்டவர் ஆக்கும். Submarino பலருக்கும் அப்படி ஒரு அனுபவத்தை வழங்க கூடிய படமாக இருக்கும்.
இதே வருடத்தில் வெளியான Biutiful படமும் இதோடு இணைத்து பார்க்க வேண்டிய படமே. Redemption தான் இரண்டிற்கும் உள்ள பொதுவான மையம்.
Submarino இயக்குனரின் மற்றொரு படமான The Hunt சினிமா காதலர்கள் தவற விட கூடாத படம். The Hunt ஒரு மனிதனுக்கு benefit of doubt குடுக்க முடியாத அளவுக்கு ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகும் போது அவனுடைய சமூகம் அவனை எப்படி நடத்தும் என்று சொல்லும் படம்.
For More Details - http://www.imdb.com/title/tt1322385/?ref_=nv_sr_1
- Maruthu Pandian Prometheus
இந்தநாள் என்னுடைய பிளாக் பிரசிவிக்கப்போகிறது ஸ்ரீராம், என்கிற முன்தெரிவித்ததலை உங்களிடமிருந்து பெற்றிருக்காமல் எதேச்சையாக முகநூலில் புகுந்ததும், உங்கள் பிளாக் லிங்க்ஐ தாங்கியிருக்கும் பதிவைக் கண்டு, பிளாக்-ஸீ லிங்க்கை சொடுக்கி உள்நுழைந்தேன்...
ReplyDeleteஎன் மனதில் மலர்ந்திருந்த எண்ணத்தின் வெளிப்பாடு உங்கள் கட்டுரையின் முதல்வரியாய் இருப்பதை கண்டு பிரமித்து கிடக்கிறேன்...
நிறைய எழுதுங்கள்... வாசிக்க காத்திருக்கிறேன்.... //ஒரு திரைப்படம் பற்றி எதுவுமே தெரியாமல் பார்ப்பது தான் ஒரு திரைப்படத்தை எந்த முன்முடிவுகளும் இல்லாமல் ரசிக்க சிறந்த வழி.//