Thursday 28 December 2023

The Element Chapter 14 - The Unicorn

The Element 


Chapter 14 - The Unicorn 


20ம் தேதி காலையில் house owner கீழே அவர் bikeஐ start பண்ணும் முயற்சி கேட்டது. நான் கீழே இறங்கி வந்து petrol tank ஐ திறந்து மூடுங்க start ஆகும் என்றேன். அது போல செய்ததும் வண்டி start ஆனது. அவர் ஒரு அடி உயரத்தில் இருந்த நீரில் வண்டியை இறக்கி செலுத்தினார். Parking areaவில் இருந்து நீர் முழுவதும் வடிந்து சகதியாக கிடந்தது.


வெள்ள நீர் parking areaவிற்குள் நுழைந்த போது நான் என்னுடைய bikeஐ பற்றி கவலையே படவில்லை. ஏனென்றால் unicorn வண்டியின் silencer மற்ற வண்டிகளை விட சற்று மேல் நோக்கியே இருக்கும். 


இந்த வண்டி வாங்கியதே மிக நீண்ட பயணங்களை bikeல் செய்ய வேண்டும் என்கிற திட்டத்தோடு தான். வாங்கிய இரு மாதத்தில் ஒரு முறை ஒரே நாளில் கோவில்பட்டியில் இருந்து வள்ளியூர் ராதாபுரம் வரை சென்று விட்டு திரும்பினேன். 250க்கும் மேற்பட்ட kilometre. ஒரு வாரம் முதுகுவலி பின்னி எடுத்து விட்டது. 


அதன் பின் lock down timeல் நானும் மனைவியும் கோவில்பட்டி, திருநெல்வேலி, தூத்துக்குடி என்று முக்கோண பாதையில் இந்த bikeல் shuttle அடித்துக்கொண்டிருந்தோம். கொட்டும் மழையில் எங்கேயும் நிறுத்தாமல் சராசரி வேகத்தில் சென்றிருக்கிறோம். பையன் பிறந்த பிறகு இவை அனைத்தும் மாறிவிட்டது. அவனை முன்னாடி உட்கார வைத்து ஓட்ட எனக்கு பயமாக இருக்கும். அதனால் பெரும்பாலும் அவனை வைத்துக்கொண்டு bikeல் செல்வதை தவிர்ப்பேன். 


18ம் தேதி மீண்டும் மழை கொட்டி வெள்ள நிலை உயரும் என்று செய்தி வந்த பிறகு அன்றிரவு house owner அவர் வண்டி, அவர் மகனின் வண்டி மற்றும் என்னுடைய வண்டி மூன்றிற்கும் plastic bag ஐ வைத்து silencerகுள் தண்ணீர் போகவிடாமல் தடுப்பரண் செய்திருக்கிறார். இதை மறுநாள் காலையில் பார்த்து நமக்கு இது தோணலையே என்று நினைத்தேன். 


20ம் தேதி வண்டியை அவர் வெளியே எடுத்த பின் என்னுடைய வண்டியை வெளியே எடுப்பதற்கு ஏதுவாக நிறுத்தி, தூசு தட்டி வைத்தேன். பையன் பகல் தூக்கம் போடவும் வெளியே சென்று வருகிறேன் என்று மனைவியிடம் சொன்னேன். 


அவள் நான் வாங்கி வர வேண்டிய பொருட்களின் பட்டியலை வாசித்தாள். நான் வெளியே போய்ட்டு வாறேன்னு தான் சொன்னேன் கடைக்கு போய்ட்டு வாறேன்னு சொல்லலை என்று காட்டமாக பதில் சொன்னேன். சொல்லிவிட்டு காய்கறி வாங்கும் பையை எடுத்து வைத்துக்கொண்டேன். 


வண்டியை start செய்து 2 நிமிடம் உறும விட்டேன். Gear போட்டா தான வண்டி போகும் என்றாள். கேட்டை அடைக்க தான் உன்னை கீழ கூட்டி வந்தேன், gear போட இல்லை என்று சொல்லி விட்டு முதல் gearஐ போட்டு வண்டியை நீரில் இறக்கினேன். காலில் நீர் படாமலே bumperல் வைத்துக்கொண்டு தெருவை தாண்டி வெளியே வந்துவிட்டேன். 


எனக்கு சட்டென்று Water World படமும், சமீபத்திய Avatar படமும் நினைவுக்கு வந்தது. மனிதன் தண்ணீர்க்குள்ளேயே வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா? கடலோடியாக இருந்தாலும் வாழ்க்கை மண்ணில் தானே நிகழ முடியும்? 


தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டிற்கு வந்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் நோக்கி செல்ல முயன்றேன். அரை kilometre கூட செல்ல முடியவில்லை. தண்ணீர் குளம் போல தேங்கி இருந்தது. பின்னர் பாளையங்கோட்டை நோக்கி திரும்பினேன். 


தண்ணீர் தேங்கியிருந்தாலும் வண்டியை செலுத்த முடிந்தது. மக்கள் ஒரே சாலையை வருவதற்கும் போவதற்கும் பயன்படுத்தி மாற்றி மாற்றி தண்ணீரை அடித்துக்கொண்டு சென்று கொண்டும், வந்து கொண்டும் இருந்தனர். நாங்கள் வழக்கமாக போகும் bakery, மளிகை கடை எல்லாம் பூட்டிக் கிடந்தது. 


பெரும்பாலும் கடைகளே இல்லை. காய் கறி கடை பகுதியாக shutter போடப்பட்டு, பகுதியாக திறந்து வைத்து மக்கள் queue வில் நின்று காய் வாங்கியதாக காலையில் house owner சொல்லியிருந்தார். எனக்கு queue வில் நிற்க பொறுமையும் இல்லை, queue jump பண்ணும் திறமையும் இல்லை. 


வண்டியை 3ம் mile பாலம் நோக்கி விட்டேன். Median பல இடங்களில் சாய்ந்து கிடந்தது. தள்ளிவிடப்பட்டது போல தான் தெரிந்தது. சாலையில் பல ஆழமான பள்ளங்கள் இருந்தன. பாலத்தில் மாடுகளை நிறுத்தி பால் கறந்துகொண்டிருந்தனர். ஒருவர் என் வண்டியை நிறுத்தி highwaysல் இறக்கி விடமுடியுமா என்று கேட்டார். சரி ஏறிக்கொள்ளுங்கள் என்றேன். 


அவரை இறக்கிவிட்டு Harbour செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்று Fisheries கல்லூரியில் U Turn அடித்து திரும்பினேன். நெல்லைக்கு வாகனங்கள் அனுமதி இல்லை என்று திருப்பி விட்டனர். கோவில்பட்டி செல்லும் பாதை அதாவது தூத்துக்குடி - மதுரை highway கேட்பாரற்று கிடந்தது. 


Bikeல் தனியாக கோவில்பட்டி செல்வதாக இருந்தால் அப்படியே திரும்பி பார்க்காமல் சென்று விடலாம். மனைவி மற்றும் மகனை அவ்வளவு தூரம் bikeல் அழைத்து செல்வது தேவையில்லாத risk. ஊரில் இருந்து வண்டி கொண்டு வந்தால் highways வழியாக வர சொல்வோம் என்று நினைத்துக்கொண்டு திரும்ப வந்தேன். 


உடன் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரை தொடர்பு கொள்ள முயன்று call connect ஆகவே இல்லை. நேரில் சென்று பார்ப்போம் என்று அவர் வீட்டு திசை நோக்கி சென்றேன். வழியில் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். 


பல bikeகுகள் ஒரு mechanic கடை வாசலில் நின்றன. ஒரு Carன் bonnetஐ திறந்து வைத்துக்கொண்டு இரண்டு பேர் காரின் உள்ளே அமர்ந்து சோத்துபொட்டலத்தை பிரித்து கொண்டிருந்தனர். 


மக்கள் முகங்கள் எந்த ஒப்பனையும் இல்லாமல் காணக்கிடைத்தன. கண்களில் இது எப்போது முடியும் என்கிற ஏக்கம் நிறைந்து கிடந்தது. ஒரு குடும்பம் ஆளுக்கு ஒரு பையோடு தேங்கியிருந்த நீருக்குள் இருந்து வந்து மதுரை பதிவு எண் கொண்ட ஒரு 7 seater வண்டியில் ஏறியது.  


மக்கள் ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள், மின்சாரம் கிடைக்க இன்னும் இரண்டு நாட்களோ அதற்கு மேலோ கூட ஆகலாம். நகரம் குண்டு விழுந்து சிதைந்தது போல் கிடந்தது. 


நோய்கள் பரவலாம், அத்தியாவசிய பொருட்களுக்கு அடிதடியாகலாம் என்று யோசித்துக்கொண்டே வரும் போதே நான் இது வரை இந்த பகுதிகளில் பார்க்காத பல புதிய முகங்கள் தென்பட்டன. பார்த்தவுடன் சந்தேகத்தை கிளப்பும் முகங்கள். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி குற்றம் புரிபவர்கள் என்று மனதில் ஒரு எண்ணம் எழுந்தது.


நண்பரின் வீட்டிற்கான சாலையில் ஒரு குளம் உருவாகியிருந்தது. என்னை தாண்டி சென்ற ஒருவர் ஆழம் ஜாஸ்தி அப்படி சுத்தி போங்க என்று ஒரு பாதையை காட்டினார். நான் மேற்கொண்டு செல்ல விரும்பாமல் எனது வீட்டை நோக்கி திரும்பினேன். 


இன்று மாலை மின்சாரம் திரும்பும் என்று எந்த உறுதியும் இல்லை. இன்று காலை house owner வீட்டில் இருந்து கொஞ்சம் காய் கறிகள் கொடுத்தனர். தொட்டி தண்ணீர் நாளை காலியாகிவிடும். அதன் பின்னர்? இதற்கு மேல் ஒரு நொடி பொறுக்க முடியாது கோவில்பட்டி கிளம்பிவிடுவோம் என்று வீடு நோக்கி விரைந்தேன். 


No comments:

Post a Comment